”சாதிதான் தேசியப்பிரச்சனை” ‘வல்லிசை’ நாவல் அறிமுகம்

சொல்லப்படாத, அதிகம் பேசப்படாத ஒரு வரலாற்றையும், அந்த வரலாற்றின் காலத்தை ஏந்திச்செல்லும் மாந்தர்களை புனைவு மொழியால் பின்னிப் பிணைத்துச் செல்லும் ஒரு பிரதியாகவும் அழகிய பெரியவனின் ‘வல்லிசை’ எனும் நாவலை வாசித்து சிலிர்த்தேன்.

தலித் இலக்கியம் என்பதற்கான வரையறை மீறல்களையும், ஊன்றப்பட்டு வரும் அடையாள அரசியல் மீதான மாற்று கருத்துருவாக்க முனைப்பிற்கான உரையாடல்களையும் ‘வல்லிசை’ யாக மனதில் அதிரச் செய்யும் நாவல்.

தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக செயல்பட்ட இயக்கங்கள், அமைப்புகள், ஆளுமைகள் என்பன நிலத்தடி நீர் ஊற்றாக தோண்ட தோண்ட புதிய சுவை நீராக சுரந்துகொண்டே இருக்கின்றது.

சமண இலக்கிய சான்றுகளூடாக சாதிய வரலாற்றுப் ‘புனைவை’ வேறொரு சிந்தனைத் தளர்த்திற்குள் நகர்த்தியிருப்பவர் அயோத்திதாசர் அவர்கள். அம்பெத்கரின் சமூக விடுதலை அமைப்பான ALL INDIA SCHEDULED CASTE FEDERATION எனும் அமைப்பு 1930களில் செயல்பட்டு வந்திருக்கின்றது. அம்பெத்கர் இயக்க வரலாற்று அத்தியாயங்களில் ஒன்று வட-தமிழகத்திலும் மூழ்கியும், மூடப்பட்டும் கிடந்திருக்கிறது. ஆழ்கடல் முத்து அது, மேலுழுந்திருக்கிறது. அதன் வாசல் திறந்து ‘வல்லிசை’ முழங்க அதன் வரலாற்று மாந்தர்களுக்கும் புனைவுப் போர்வை அணிந்து அழைத்து வருகிறார் அழகிய பெரியவன். அந்த அமைப்பின் வரலாற்று ஆதாரங்களையும், அந்த அமைப்பின் தலைவர்களின் உண்மையான பெயர்களையும், அக்காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெயர்களையும் புனைவு மொழியோடு கலந்து முழங்குகிறது ‘வல்லிசை’. Continue reading

அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் மலையக சமூகத்தை இழிவுபடுத்தும் வார்த்தை பிரயோகத்தின் ஊடாக அச்சமூகம் குறித்த தனது மனநிலை போக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மேட்டுக்குடி மனநிலை வெளிப்பாட்டை ஒரு சமூகத்தின் மீது வெளிப்படுத்தியவரான சிவஞானம் சிறீதரன் அவர்கள் வன்னி வாழ் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியாகவும் செயல்படுவதென்பது வேடிக்கையானதே.
அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது. காலங்காலமாக சமூக ரீதியாக இழிவுபடுத்தப்பட்டும், பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் சமூகங்களான எமக்கே மலையக மக்களின் மன வலியை, வேதனையை மிக ஆழமாக உணரமுடியும். சக்கிலிய நாயே என பேசிய சிவாஜிலிங்கத்தை கடந்து போன எமது யாழ் மேட்டுக்குடி சமூகம், தனது இடுப்பிலே தாங்கி வந்த சிறீதரனை மேலும் உயர்த்தி தோள்மீது காவிச்செல்லுமே அல்லாது அவரை கீழே போட்டுடைக்கப்போவதில்லை.
மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் சறீதரன் போன்றவர்கள் மக்களுக்கான,சமூகத்திற்கான ,
சமூக கட்டுமான அபிவிரித்திக்காக என எதையுமே மேற்கொள்ளாதபோதும் தொடர்ந்தும் ‘தங்களது’ பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் காரணம் என்ன!!!
எமது அனுபவத்திற்கு தெரிந்த ஒரே ஒரு காரணம்தான்…, சாதிய, பிரதேசவாத உணர்வுகளை தீட்டிக்கூராக்குவதொன்றே யாழ்மையவாத சாதிய மேட்டுக்குடி சமூகத்திற்கு உவப்பான காரியமாகும். இந்த அடிப்படை ஒன்றே எமது சமூகத்திற்கு போதுமானது இவர்கள் போன்றவர்களை தமது பரதிநிதிகளாக தொடர்ந்தும் தேர்ந்தெடுப்பதற்கு.

முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் சிறிதரன் எம்பிவடக்கத்தையான் என நான் சொல்லவில்லை நிரூபித்தால் பதவி துறப்பேன் …

Tharmalingam Siva 发布于 2017年7月16日

நிலவும் சாதிய சமூக மனநிலை என்பது: ……….

நிலவும் சாதிய சமூக மனநிலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலமைக்கேற்ப சூழலுக்கேற்ப மாறுபட்டுவருகிறதெனவும், (!!!) அதன் காரணமாக ‘அதனது’ இருப்பு நிலையானது தளர்ந்து வருகிறது என பேசப்பட்டும், நம்பப்பட்டும் வருகின்றது. இந்த தகவலும் நம்பிக்கையுமானது அதிகமாக புகலிடங்களிலேயே வலியுறத்தப்பட்டும் வருகிறது. நாம் சாதிய ஒடுக்குமுறை குறித்தோ அதனது இருப்பையோ கேள்விக்குட்படுத்தும் தருணங்களில் மேற்படியான தளர்ந்து போகிறது, மறைந்து போகிறது என்பதோடு இப்போ இங்கு யார் சாதி பார்க்கின்றார்கள் என எமது குரலை எழுந்து ஓங்கி அடக்கவும் முனைகின்றார்கள்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து பலப்படுத்தி வருபவரும் தமிழ் மக்களின் விடுதலையை நேசிப்பவராகவும் காட்டிக்கொள்ளும் நோர்வே நாட்டில் வசிப்பவருமான சேது என்பவர்அண்மையில் இவ்வாறு தனது இணையத்தில் எமது சமூகத்தின் சாதிய இருப்பை வலுப்புடுத்தும் சாட்சியமாக விளங்குகிறார்.

 

 

சமூக விடுதலைப்போராளிகளை நினைவு கூர்வதும் டாக்டர் அம்பேத்கர் சிந்தனைப் பகிர்வும்

வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”.


கடந்த திங்கட்கிழமை 06-03-2017 வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”.
வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவர். இதை ஆவா குறூப், ‘ஈவா குறூப்’ எனப்படும்  வன்முறை குழுக்களின்
செயல்பாடாக வெளிப்படுத்தப்படும் வாய்ப்பிற்கும் இடமிருக்கிறது. இவ்வாள்வெட்டு சம்பவமானது இவ்வாறாக திரிபுபடுத்தப்பட்டு வருமாயின்! இது, அதுவல்ல!
சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவரும் அரச உத்தியோகத்தவர்கள். இவர்களுக்கும் ஆவா குறூப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்!!  இல்லை என்றால் எதற்காக வாள்வெட்டிற்கு இலக்கானார்கள்!
மேற்படி இருவரும் மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் ‘உயர் சாதியினர்’ எனப்படுபவர்கள் வாழும் எல்லையில் காணிகள் வாங்கி வீடுகட்டும் முயற்சியில் ஈடுபட்டுவந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே வாள்வெட்டிற்கு அடிப்படைக்காரணமாக இருந்திருக்கிறது. சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவருடனும்…, நீங்களெல்லாம் எங்களுக்கு அருகாமையில், எங்களுக்கு நெருக்கமாக வாழமுடியாதே, ‘நீங்க வேற ஆக்களல்லவா’ என்பதான உட்பொருளில், மிக தயவாகவும் ‘கௌரவமாகவும்’  இவர்களுடன் ஆரம்பத்தில் பேசினார்கள், விவாதித்தார்கள், பின்பு மிரட்டினார்கள்… அனைத்தையும் அலட்சியப்படுத்தியவாறு சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவரும் தமது வீடுகட்டும் பணிகளைத்  தொடந்து கொண்டிருக்கும்போது இனம்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளனர்.

Continue reading

ஏன்!!! எதனால்!!!

-தேவதாசன்-

முகப்புத்தகத்திலும் மேலும் சில சமூக வலைத்தளங்களிலும் வந்த இச்செய்தி மிக வேதனையையும், எமது ‘சமூகத்தின்மீதான’ வெறுப்பும் கோபமும் தொடர்வதற்கே வழிகோலியது. காரணம் தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனுக்கு நடந்த ஒரு சமூகபுறக்கணிப்பாகவே  இதை கருதத்தூண்டியதால் . தேவரயாளி இந்துக்கல்லூரிக்கு எமது சமூகத்திலிருக்கும் ஒரு ‘அடையாளம்’ இதற்கும் காரணமாக இருக்குமோ எனும் சந்தேகம் எனக்கு இயல்பாகவே உறுத்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இருந்தாலும் இச்சமயத்தில் நான் யாழ்ப்பாணத்தில் நிற்பதால் இதன் விபரத்தை அறியும் வாய்ப்பும் ஆவலும் சாதகமாக இருந்தது. தேவரயாளி இந்துக்கல்லூரியில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனது ஓவியப் புலமை ‘களவடப்பட்டதான’ (நிர்வாகத் தவறு நிகழ்ந்ததாக நாகரீகமாகப் பொதுவெளியில் பேசப்பட்டாலும் எனது பார்வைக்கும் உணர்விற்கும் அது களவடப்பட்டதாகவே கருதத் தூண்டுகின்றது.)  செய்தியே அதுவாகும்.
எனவே சம்பந்தப்பட்ட மாணவனையும் பெற்றோரையும் நேரே சென்று சந்தித்தேன். தேவரயாளி இந்துக்கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான எழுத்தாளர் தெணியான் அவர்களையும் சந்தித்து உரையாடியபோதும் இதுசம்பந்தமான தகவல்களை மேலதிகமாகவும் பெற்றுக்கொண்டேன்.
தொடர்ச்சியாக பாடசாலைகளில் நடைபெற்றுவரும் ஓவியப் போட்டியில் தேவரயாளி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட மாணவனான, கனிஸ்டன் டானியல் வடமராட்சி கல்விவட்டார வலயத்தில் 3ம் இடத்தை முன்பு பெற்றிருந்தான். இந்தப் போட்டியில் பங்குபற்றிய முறையே;  ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் ஓவியங்கள் உலக உணவு வழங்கும் மையத்தால் நடாத்தப்பட்டுவரும் சர்வதேச ஓவியப் போட்டிக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
சர்வதேச ஓவியப்போட்டியின் பெறுபேறுகள் 2016ம் ஆண்டு யூன் மாதம் வடமாகாண கல்வித் திணைக்களகத்தால் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களின் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனான கனிஸ்டன் டானியலின் ஓவியம்
நான்காம் இடத்தை பெற்றுள்ளதாக தேவரயாளி இந்துக்கல்லூரிக்கும் அறிவிக்கப்பட்டது. சர்வதேசரீதியான போட்டி என்பதாலும் அதில் நான்காவது இடம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் அறிந்த அம்மாணவனும் பெற்றோரும் தமக்குள் பெருமைப்பட்டுப் பூரித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து சர்வதேச ஓவியப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வைபவம் வடமாகாண கல்வித்திணைக்களத்தால் மேலதிகாரியான உதயகுமார் என்பவரின் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு நான்காவது இடத்தை பெற்றவனாக முன்பே அறிவிக்கப்பட்ட கனிஸ்டன் டானியலும் பெற்றோர், உறவினருடன் சென்று நிகழ்வில் ஐக்கியமாகித் திளைத்திருந்தான். வெற்றிபெற்றவர்களின் ஓவியங்கள் அனைத்தும் அழகாக சட்டகத்துள் நிரப்பப்பட்டு வடிவமைக்கப்பட்டு மேடையில் அலங்கரிப்பட்டிருந்தது.

Continue reading

சமகால சாதிய சமூகத்தில் கல்வியும் பண்பாடும்

அகல்யா .பிரான்சிஸ்கிளைன்

“ஒடுக்கப்படும் மக்களை பகுப்பாய்வு செய்யும் போதுநாங்களும் அவர்களில் ஒருவராக இருந்து  பகுப்பாய்வு செய்ய வேண்டும் ஏனெனில்ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒடுக்கப்பட்ட மக்களை விட அதிகம் புரிந்து கொண்டவர் யாராக இருக்க முடியும். ஆதிகாரத்தின் கொடுமைகளையும் புறந்தள்ளல்களையும்ஒடுக்கப்பட்டவர்களை தவிர அனுபவித்தவர்கள் வேறு யாராக இருக்க முடியும். எனவே தான் நாமும் அவர்களில் ஒருவராக இருந்து பகுப்பாய்வு செய்யும் போது தான்  அவர்களின் பிரச்சனைகளை ஆழமாக விளங்கிக் கொள்ளலாம்”

சமூகமாற்றத்திற்கு ஏற்ப சாதிய கட்டமைப்பும் இன்று புதிய மாற்றத்தை எடுத்துள்ளது. ஆரம்ப காலத்தினைப்போன்று சாதிய தீண்டாமைகளும் புறந்தள்ளல்களும் வெளிப்படையே தெரிவதில்லை. வெளியில் பார்க்கும் போது வன்முறையற்ற நிலையில் ஓர் மௌனமான உறங்கு நிலையில் மிகவும் சாதுரியமாக சாதியக் கட்டமைப்பு புதுப்புது வடிவங்களில் இன்று மேலோங்குகின்றது.சாதியம் சமூகத்தில் இல்லை அதன் தாக்கமும் பாதிப்பும் எமது சமூகவாழ்வில் இல்லை அதனால் அதைப்பற்றி பேசவோ எழுதவோ தேவையில்லை எனக்கூறுபவர்களை 3 வகையாக நோக்கலாம்.

  1. சாதிய கட்டமைப்பை ஆதரிக்கும் பழமைவாதிகள்
  2. தேசியம் பற்றி கதைப்போர் சாதிபற்றி கதைத்தால் தேசிய ஒற்றுமை குழம்பிவிடும் என எண்ணுவோர்
  3. ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து கல்வி பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தவர்கள்.

சமகல அரசு சாதி பாகுபாடு ஒடுக்கு முறைகளுக்கு எதிராக எந்த வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. சாதிய புறந்தள்ளல்கள் இடம் பெற்றபோதும் அவர்கள் கண்டும் காணாது போல் இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் அனைவரும் அதிகாரம், செல்வாக்கு, உயர்ந்த அந்தஸ்த்து முதலியவற்றைக் கொண்ட நிலச்சுவார்ந்தர்களான வெள்ளாளார்களாக விளங்குகிறார்கள். Continue reading

காவியில் முளைக்கும் தமிழ்ஈழ ’சிவசேனை’

siva-senai-founder-at-sanatan-sanstha-foundation-programmeமனித சமூகத்தை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், அதனது  காட்டுமிரரண்டித்தனமான நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஒரு முற்போக்கு சக்தியாக பரிணமித்ததுதான் கடவுள், மதம் போன்ற உருவாக்கம். அவ்வாறு தோன்றிய (உருவாக்கப்பட்ட) கடவுள்-மதம்போன்ற கருத்துநிலையானது எவ்வித இனப்பாகுபாடுகளுமற்ற வகையில் மனிதசமூகத்தின் மீதான நலன்களுக்கும் அவர்களது பாதுகாப்பிற்குமான ஒரு கருவியாகவே தோற்றம் தந்தது. அறிவியல்-அதிகார வளர்ச்சிப்போக்கின் நிமித்தமாக கடவுள்-மதம் குறித்த ஒரே கடவுள், பல கடவுள், உருவவழிபாடு  போன்ற கோட்பாடுகளின் மோதல்களினால் பல்வேறு மதங்களின் தோற்றமும், அதை நிறுவனப்படுத்தும் போக்கும் நிலைபெற்றது.

இங்கே நாம் இதை நீட்டி நிமித்தி தொடங்க வேண்டியதற்கான தேவையும் நிர்ப்பந்தமும் எதனால்!

Continue reading

பெருமாள் கணேசனுக்கு “கடவுள்” கொடுத்த வரத்தை புடுங்கியது “பூசாரி”

perumal ganeshanவடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு – கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்ததன் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் – அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக வந்திருப்பதாக – அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன. Continue reading

பெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது

கிளிநொச்சியிலுள்ள சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபராகும் தகுதியுடையவராகவும் அப்பணியை மேற்கொள்வதற்கான கல்விவலயத்தின் அனுமதியும் பெற்ற பெருமாள் கணேசன் அவர்கள்  யாழ்மேலாதிக்க அரசியல் அதிகாரப் பின்பலத்தால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையகத் தமிழரான பெருமாள் கணேசன் அவர்கள் கிளிநொச்சி வாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.  கல்விப்புலமை நிமித்தமாக அடையக்கூடிய அவரது உயர்பதிவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்திருக்கின்றது.
தொடர்ந்தும் கல்விபணியகத்தின் உயர்மட்ட பதவிகளை தீர்மானிக்கும் சக்திகளாக  யாழ்மேலாதிக்க சாதியினராகவே இருந்து வருகின்றனர்.  அதன் காரணமாக யாழ்மாவட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த கல்வியாளர்கள் உயர்பதிவிகளை அடைவதற்காக பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டியுள்ளது.

Continue reading