பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாகாணசபையின் தேர்தல் ஒதுக்கீடும், பிரதிநிதித்துவ பங்கீட்டு முறைமையும்.

          பிரான்ஸ் படத்தை அழுத்தவும்

‘அறுவடைக் கனவுகள் ‘நாவல் மீதான எனது வாசிப்பு மனநிலை

-அசுரா- 16-02-2014 அன்று ‘வாசிப்பு மனநிலை விவாதம்-10’ இல் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். வாசிப்பிற்கான ஆர்வம் என்பது பன்மைத்துவம் கொண்ட ஒரு அனுபவமாகவே இருக்கும். அதாவது ஒரு படைப்பின் மீதான ஆர்வம் என்பது வாசகனின் மனநிலை சார்ந்தே இயங்குகின்றது. வாசிப்பு மனநிலை என்பது ஒரு படைப்பின் அழகியலை மையமாகக் கொண்டு இயங்கலாம். கருத்தியல் இலட்சியவாதத் தீர்வுகாணும் மனநிலையில் இருந்து இயங்கலாம். யதார்த்த விருப்பு நிலையில் இருந்து இயங்கலாம். புனைவுத் … Continue reading

இலக்கியச் சந்திப்பின் பயன்பாட்டு நிலை குறித்த எனது அனுபவப் பார்வை

– அசுரா – புகலிடத்தில் தொடர்ச்சியாக  நடைபெற்று வரும்  இலக்கியச் சந்திப்பின்  பயன்பாட்டு நிலை குறித்த எனது அனுபவப் பார்வை. 1992ஆண்டு பிரான்சில் நடைபெற்ற தருணத்தில் இருந்தே எனக்கு   இலக்கியச்சந்திப்பு அறிமுகமாகியது. பிரான்சில் நடைபெற்ற அனைத்து இலக்கியச் சந்திப்பிலும், ஜெர்மெனியில் நடைபெறற்ற சில இலக்கியச் சந்திப்புகளிலும், 2006ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பிலும் மட்டுமே நான் வெறும் பார்வையாளனாக கலந்து கொண்டிருக்கின்றேன். பிரான்சில் நடைபெற்ற  38வது இலக்கியச் … Continue reading

தமிழ்த் தேசியத்தை சந்தைப்படுத்துவதற்காக மொழியும், இனமும் கிடந்து மாளும்.

(வாசிப்பு மனநிலை விவாதம் -3 இல் பேசப்பட்டது)  -அசுரா- ———————————————— யோகர்ணன் அவர்களது படைப்புகள் குறித்த வாசிப்பு ‘மனநிலை’யானது  வெவ்வேறு தளத்தில் உள்வாங்கப்பட்டு வருவதை அவதானித்து வருகின்றேன். புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், என்பதற்கும் அப்பால் தமக்குகந்த சிந்தாந்தக்-கோட்பாட்டு சடங்குகளின் வழி நின்று யோகர்ணனின் படைப்புகளை அரித்தெடுப்பவர்களையும் காணக்கூடியதாகவே உள்ளது. நானும் ஒரு புலி எதிர்ப்பாளனாகவே இருந்து வந்துள்ளேன். புலிகளின் பாசிச சர்வாதிகார வழிமுறைகள் நீடித்து நிலைத்துள்ளவரை. ஆனால் அதே … Continue reading

“இலங்கையில் தோன்றிய சாதியமும் அதன் பின்னணியம்”

கனடாவில் நடைபெற்ற “பன்முகவெளி2” இல் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். -அசுரா- எம்மத்தியில் நிலவும் சாதியம் பற்றிய கருத்தியலானது பல்வேறுவகையான புரிதலுக்குட்பட்ட நிலையில் இயங்கி வருகின்றது. அந்தவகையில் எம்மத்தியில் சாதியம் குறித்து மூன்றுவகையான சிந்தனைப்போக்கு நிலவுகின்றதை என்னால் காணக்கூடியதாக உள்ளது. மானுட தோற்ற வரலாற்று நிகழ்வின் ஓர் அம்சமாக சாதியத்தை பார்க்கின்ற ஓரு பார்வை. அதாவது மார்க்சியச் சிந்தனை வெளிச்சத்தின் ஊடாக எம்மத்தியில் நிலவும் சாதிய சிந்தனைப்போக்கை வரையறுப்பது ஓர்நிலை. … Continue reading

“ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டு வார்த்தை போதும்.”

சோபாசக்தி, தீபச்செல்வன் உரையாடல் குறித்த எதிர்வினை. =கற்சுறா..அசுரா= ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” … Continue reading

“ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றமும் அதனது தமிழ்த் தேசிய சார்பு நிலையும்”

பிரான்சில் நடைபெற்ற தியாகிகள் தினம். (அசுரா) மண்டபத்தில் நுழைந்ததும் நூற்றுக்கும் அதிகமான கொல்லப்பட்ட தோழர்களினது புகைப்படங்கள் மண்டபச் சுவர்களை நிறைத்துக் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.   நடந்து முடிந்த யுத்தம் பலிகொண்ட உயிர்களின் பெறுமதி இப்படி சுவர்களில் தொங்குவதற்காகவே பயன்பட்டுப்போனது. அந்த யுத்தம் விழுங்கி ஏப்பம் விட்ட உடைமைகளின் இழப்புக்களையும் நாம் யாரிடம் கோருவது? அது மட்டுமா நிகழ்ந்தது!! மனிதத்தை, மக்களை நேசித்த தோழர் நாபாவையும் பலிகொடுத்து… இன்று நாம் சாதித்ததுதான் … Continue reading

திரு. ஆனந்த சங்கரி அவர்களுக்கு …..

ஐயா, வழமையாக நீங்கள்தான் அனைவருக்கும் கடிதம் எழுதுவீர்கள். அதை மீறி நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டி வந்ததையிட்டு வெட்கப்படுகிறோம். யாழ் உதயன் பத்திரிகையில் நீங்கள் கொடுத்திருந்த செவ்வியே இதனை எழுதத் தூண்டியது. கடந்த முப்பது வருடங்களாக  இலங்கை நாடு பலத்த இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகியிருந்தது. இன முறுகல் தோன்றிய ஆரம்பகாலங்களில் நீங்கள் இலங்கையின் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் சாதாரணமக்களுக்குக் கிட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய வாசஸ்தலத்தில் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதும் … Continue reading

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

30 JANVIER 2008 அசுரா ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? எனும் தலைப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் 2002 ஆம் அண்டில் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். ரவிக்குமார் அவர்கள் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர்.  அவரையும், அவரது எழுத்துக்களையும் ‘நிறப்பிரிகை’ எனும் சஞ்சிகையினூடாகவே என்னைப்போல் இலங்கை வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர் எனக் கருதலாம். ரவிக்குமார் அவர்கள் தற்போது ’காலச்சுவட்டு’ முகாமுக்குள்ளும், ‘விடுதலைச்சிறுத்தைக்’ கூட்டுக்குள்ளும் அடைபட்டு தனது தனித்துவத்தை இழந்த நிலையில் … Continue reading

பிரான்சில் பரபரப்பான செய்தி

‘’தத்துவவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு குருடனைப் போன்றவன் என்று தத்துவவாதியை, இறையியல்வாதி குற்றம் சாட்டுகிறார். ஆனால் இறையியல் வாதி யோ, மதவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையை தான் பார்த்ததாகக் கூறி அதை எதிர்பார்த்திருக்கும் ஒரு குறுடனைப் போன்றவன் எனக் குற்றம் சாட்டுகிறார்.’’ (அம்பேத்கர்) பிரான்சில் பரபரப்பான செய்தி ”இறந்த போப்பாண்டவரின் அருள்கிடைக்கப்பெற்று தனது தீராத நோயிலிருந்து மீண்ட சிஸ்டர் சிமொன் … Continue reading