நாதூராம் கோட்சே உயிருடன் இருக்கிறான்!!!

-கற்சுறா- பால்தாக்கரே வாழ்ந்த காலத்திலிருந்த அச்சத்தை விட அவரது மரணம் அதிக அச்சத்தை உருவாக்கிவிட்டிருக்கிறது. மானிட மேன்மைக்கு ஊறுவிளைவிக்கும் காலங்களாக இனிவரும் காலங்கள் அமையும் என்பதை அவரது இறுதிச் சடங்கு நினைவுபடுத்துகிறது. பம்பாயில் திரண்ட மக்கள் தொகை இந்தியாவின் முட்டாள்தனத்தைச் சுட்டி நிற்கிறது.

சாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய தமிழ்ச்சமூகமும்.

-கற்சுறா– தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் சாதியக் கலவரத்தால் தீக்கிரையாகியிருக்கிறது. கலப்புத் திருமணத்தால் கொதித்தெழுந்த வன்னியச் சாதி வெறியர்கள்  ஆதிதிராவிடர்களின் இலட்சக்கணக்கான சொத்துக்களையும் அழித்து இருப்பிடமில்லாமல் ஆயிரக்கணக்கான மக்களை வாழ வழியற்றவர்களாக்கித் தெருவில் விட்டிருக்கிறார்கள். இது நடைபெற்றது 1800களில் அல்ல. இன்று. அதாவது 2012களில். வன்னிய சாதிப் பெண்களைக் கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா… வன்னியசங்கத் தலைவர் நான் சொல்கிறேன் என்று காடுவெட்டிக்குரு என்கிற வன்னியசங்கத் தலைவன் கடந்தமாதம் அறைகூவியிருக்கிறான். அதன் … Continue reading

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால வினளவாக இருக்கும்

எஸ்.எம்.எம்.பஷீர்  அவர்கள் கனடா சென்றபோது கற்சுறவுடன் பகிர்ந்து கொண்ட அனுபவம். கற்சுறா:  யதற்போது நிகழ்ந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்  கிழக்கில் முதல்ஆட்சியமைத்த தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சியை அமைக்க முடியாமல் போய்விட்டது. கடந்த தேர்தலைப் புறிக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முறை வெட்கமற்றுப் போட்டியிட்டாலும் அதுவும் ஆட்சியமைக்க முடியவில்லை. ஆழும் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவரே முதலமைச்சராகியுள்ளார். இந்த நிலையில் தமிழ் மானம் போய்விட்டதாகவே கருதும் தமிழ்தேசியவாதிகள் … Continue reading

‘தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்’ நூல் வெளியீடும், வரலாற்றைப் பேசுதலும்

  தோழர் யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்’ எனும் நூல் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியால் பிரான்சில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து  இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் ஆதரவாளர்களால் லண்டன்,யாழ்ப்பாணம், இந்தியா,கொழும்பில் வெளியிடப்பட்டதோடு கடந்த 22 ஏப்ரல் 2012 இல் கனடாவிலும் வெளியிடப்பட்டது.  அச்சம்பவத்தை கற்சுறா அவர்கள்  சுருக்கமாக விபரித்துள்ளார். ——————————————————————— -கற்சுறா- ‘தீண்டாமைக் கொடுமையும்  தீமூண்ட நாட்களும்’  நூல் வெளியீடும், வரலாற்றைப் பேசுதலும் … Continue reading

இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.

-கற்சுறா கற்சுறா:  2011 ஜனவரிமாதம்  நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் … Continue reading

“நீங்களல்ல நாங்கள்”

-கற்சுறா- நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம். இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது … Continue reading

“பாவமன்னிப்பு அரசியல்”

– கற்சுறா- 1. தோழர் சிவம் நினைவும் தேடகம் 20 ஆண்டு சிறப்பு மலரும். கனடாவில் தேடகம் அமைப்பினரால் தோழர் சிவம் அவர்களது நினைவும் தேடல் நூல் வெளியீடும் ஒக்ரோபர் 2ம் திகதி நடாத்தப்பட்டது. நிகழ்வில் இலங்கையில் இருந்து மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளளர் தோழர் சி.கா.செந்தில்வேல் அவர்கள் கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றினார். நிகழ்வின் தலைமையுரை ஆற்றிய ப.அ. ஜயகரன் அவர்கள் தேடகத்தின் கடந்தகால எதிர்கால நடைமுறை … Continue reading

“ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டு வார்த்தை போதும்.”

சோபாசக்தி, தீபச்செல்வன் உரையாடல் குறித்த எதிர்வினை. =கற்சுறா..அசுரா= ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” … Continue reading

திரு. ஆனந்த சங்கரி அவர்களுக்கு …..

ஐயா, வழமையாக நீங்கள்தான் அனைவருக்கும் கடிதம் எழுதுவீர்கள். அதை மீறி நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டி வந்ததையிட்டு வெட்கப்படுகிறோம். யாழ் உதயன் பத்திரிகையில் நீங்கள் கொடுத்திருந்த செவ்வியே இதனை எழுதத் தூண்டியது. கடந்த முப்பது வருடங்களாக  இலங்கை நாடு பலத்த இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகியிருந்தது. இன முறுகல் தோன்றிய ஆரம்பகாலங்களில் நீங்கள் இலங்கையின் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் சாதாரணமக்களுக்குக் கிட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய வாசஸ்தலத்தில் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதும் … Continue reading

பன்முகவெளி (கனடா)

பன்முகவெளி அரங்கு கனடாவில் முதல் முறையாக 23 ஜனவரி 2010 அன்று23 ஜனவரி 20105225 Finch Av East, wood said point, Scarborough,Ont,Canada .இல் நடைபெற்றது. நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்தப்படுவதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்தும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் பதிவை முன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் … Continue reading