“நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்”

இராமசாமி துரைரட்ணத்திற்கும் ரவிக்குமார் அவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முகநூல் உரையாடலின்போது இராமசாமி துரைரட்ணம் அவர்கள் ரவிக்குமாரை சாதிப்பெயர் கூறி இழிவுபடுத்திய செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் எதுவாகவும் இருக்காலம். ஈழத் தமிழ் சமூகம் உருத்தரிரமூர்த்தி சேரன் போன்றவர்களைத்தான் நம்பி இருக்கின்றது எனும் தேசியவாதக் கருத்து நிலையில் தோழர் ரவிக்குமார் நம்பிக்கை வைத்திருப்பதற்கான காரணங்களும் எதுவாகவும் இருக்கலாம். அவை வெறும் கருத்தியல் சார்ந்த ஒரு … Continue reading

புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.

அரசியல்அமைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புதிய அரசியல் யாப்பு மாற்றத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளிலும் மாற்றங்கள் நிகழும் எனும் நம்பிக்கைகளும் மேலோங்கி வருகின்றது. இத்தருணத்தில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாம், தலித் சமூக அரசியல்-சமூக மேம்பாட்டை கருத்தில்கொண்டு தமிழ், சிங்கள அரசியல் தலைமைகளிடம் சில பரிந்துரைகளை முன்வைக்க வேண்டிய அவசியத்தை உணருகின்றோம். அந்தவகையில் புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூக … Continue reading

சமூக விடுதலைப் போராளியான தோழர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் மறைந்த 27வது வருட நினைவுக் குறிப்பு

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி –பிரான்ஸ்- செப்டெம்பர் 27- 1917-                                    ஜனவரி 12- 1989

சாதிய மனநிலையில் அலட்சியப்படுத்தப்பட்ட “தலித் மக்களின் உரிமைப்போராட்டம்”

-இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ் திருகோணமலை நகரத்து சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்தை கடந்த மே2-3 (2015) ஆம் திகதிகளில் நடத்தினார்கள். பல வருடங்களாக இத்தொழிலாளர்களின் சம்பளம் உயர்தப்படாமல் இருப்பது. நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் தொடர்ந்தும் பல வருடங்களாக நிரந்தர பணியாளர்களாக இல்லாது நாட்கூலிகளாகவே இருப்பது. பிள்ளைப் பேறுகாலத்து உதவிகள் மறுக்கப்பட்டு வருவது. மருத்துவ விடுமுறைகாலத்திற்கான உதவிகள் மறுக்கப்பட்டு வருவது இத்தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய உத்தரவாதம் மறுக்கப்பட்டு வருவது. … Continue reading

ஒரு திருநங்கையின் திறந்த மடல்

– லிவிங் ஸ்மைல் வித்யா தமிழ் சினிமா கண்ட மாபெரும்(!) இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு, தங்களின் ஐ(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்குப் பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறுக்கித்தனங்களுக்கும், நாயக வழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம், “a shankar film”  தான் என்பதை அறியாதார் யார்?!

சாதிய எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு “பழுத்த ஆவணத்திற்கு” எமது அஞ்சலி.

கன்பொல்லை எனும் கிராமம் வரலாற்றில் சாதிய போராட்டங்களை எதிர்கொண்ட ஒரு கிராமம். அங்கு வாழ்ந்த முத்தையா தவராசா அவர்கள் சாதி எதிர்ப்பு போராட்டங்களின் ஒரு பழுத்த ஆவணம். சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகஜன இயக்கம் போன்ற சாதி எதிர்ப்பு போராட் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியவர்.

பெரியாரும் உழுது களை பிடுங்கிய மண்ணிலா இது நடந்தது!!!

  பெருமாள் முருகன் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சாதியும் நானும்’ எனும் கட்டுரைத் தொகுப்பை மையமாக வைத்து எமது 21 வது ‘வடு’ வில் ஒரு கட்டுரையும் எழுதப்பட்டது. பெருமாள் முருகன் சாதியம் குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியவர். இந்து பாசிச சக்திகளின் மிரட்டல்களாலும், அச்சுறுத்தல் காரணமாகவும் தான் எழுதுவதை நிறுத்திக்கொள்வதாகவும், தன்னால் எழுதப்பட்ட அனைத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இவ்வறிவித்தலானது இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய எமக்கு … Continue reading

இலக்கிய இரட்டைஅணிகளுக்குள் சிக்காது திமிறியவன்:எஸ்.பொ

யாருடனும் சமரசப்படாது தான் நினைத்தை சாதித்து வாழ்ந்தவன். இலங்கை தமிழ் இலக்கிய வெளியில் அணிகளின் அடையாளங்களை (முற்போக்கு-பிற்போக்கு) கேள்விக்குள்ளாக்கும் வகையில் திமிறி நின்று நற்போக்குத் திசையை முன்மொழிந்தவன். அதுவும் பன்முக சிந்தனைப்போக்கின் பரிமாணங்களின் போக்காகவே இருந்தது. எஸ்.பொ அவர்களின் படைப்பாளுமையும் தமிழ் மொழியை தனது ஆளுமைக்குள் வசப்படுத்தும் லாவகத்தையும் எமது படைப்பாளிகள் எத்தனைபேர் கற்றுக் கொண்டுள்ளனர்? ஆரசியல் ரீதியாக எஸ்.பொ அவர்களுடன் முரண்பட்டபோதும் நாம் தலித் சமூகமேம்பாட்டு முன்னணி எனும் … Continue reading

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்ளும் அவலநிலை’

— இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)– 21-09-2013 இல் நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் குறித்த எமது அபிப்பிராயங்களையும், அதில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிகப்பெரும்பான்மையில் வெற்றி கொள்ளவைத்தது தொடர்பாகவும் நாம் உடனடியாக எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. முன்வைக்கவும் முடியாத நிலை என்றும் கூறவேண்டியுள்ளது. பலரைப்போலவே பேசப்பட்டுவரும் தமிழ்த் தேசியம் குறித்த கருத்தாடல்களிலும், அதனை ஒரு இனவாதக் கோசமாக முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் அரசியல்-சமூக … Continue reading

இந்து நாகரீகமா..! நயவஞ்சகமா…?

‘’தீண்டப்படாதவர்கள் என அழைக்கப்படுவதே மிகப்பெரும் அவப்பேறு, அதிலும் தன்னுடைய வாயாலேயே தான் தீண்டப்படாதவன் என்கிற அவமானத்தைப் பறைசாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நிலையானது, என்னுடைய கருத்துப்படி வேற எதனுடனும் ஒப்பிட முடியாத கொடூரமானதாகும். இந்த இந்து நாகரீகத்தைப் பற்றி தீண்டப்படாதவன் என்ன சொல்வான்? ‘இது நாகரீகமே அல்ல நயவஞ்சகம்’ என்று அவன் சொன்னால் அது தவறா?‘’ -அம்பேத்கர்- (‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’- பிரான்ஸ்-) இத்தலைப்பின்  மீதான உள்ளடக்க மதிப்பீடு … Continue reading