“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன நிலை விவாதம்–5)”

மனோ: ஜீவமுரளி 89-90 களில் பிரான்சில் இருந்தவர் அவர் இங்கு இருந்தகாலத்திலே எனக்கு தெரிந்த வரையில் தீவிர இலக்கிய, அரசியல்,செயல்பாட்டாளராக இருந்தவர். ஜீவமுரளியின் இவ்வகையான எழுத்தும் ஆற்றலும் ஆச்சரியமாகவே எனக்கு தோன்றுகிறது. ஜீவமுரளி ஆரம்பகாலத்தில் அதிகம் பேசமாட்டார். தில்லையும், சுகனும் நின்றால் இவர் அவர்களுக்கிடையில் மிக அமைதியாக இருப்பார். இருந்தாலும் இலக்கிய கூட்டங்களில் இறுதிவரை பலம் சேர்க்கும் ஒருவராக அவரை நான்  கண்டிருக்கிறேன். இவ்வாறு ஜீவமுரளி அவர்கள் பல்வேறு தள … Continue reading

வாசிப்பு மனநிலை விவாதம்-5

நிகழ்ச்சியை மனோ அவர்கள் நெறியாளுகை செய்தார். மனோ அவர்கள் பல்வேறு ஆளுமை கொண்டவர்.   ‘ஓசை’ ‘அம்மா’ போன்ற சிறு சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக இருந்தவர்.  ‘அரங்க இயல்’ துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.இவரின்  இயக்கத்தில்  பல நாடகங்கள் பிரான்சிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றப்பட்டுள்ளது. சோபாசக்தியை புகலிட இலக்கியத்தில்  அறிமுகப்படுத்தியவரும் மனோ என்பது குறிப்பிடத்தக்கது.

‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4

தில்லை நடேசன் அவர்கள்  நாடக, கூத்து போன்ற கலை வடிவங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர், கட்டுரைகள், கதைகள் போன்ற இலக்கியத்துறைகளிலும் தனது பதிவுகளை செய்து வருபவர். அவரது கூத்து நாடக மரபு பற்றிய ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பொன்றும் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது.‘புத்தனின் பெயரால்’எனும் நூல்பற்றிய தனது அனுபவத்தை கூறுகின்றார். தில்லை நடேசன்: இது ஒரு மேடைப்பேச்சாகவோ அல்லது ஒரு கருத்தரங்காகவோ இல்லாமல் ஒரு கலந்துரையாடலுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இதுபற்றி … Continue reading

வாசிப்பு மனநிலை விவாதம்-4

முதலாவதாக ‘முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்’ நூல் பற்றியும், ‘புத்தனின் பெயரால்’ எனும் நூல் பற்றிய அறிமுகத்தை ஜோய் அவர்கள் மேற்கொண்டார். அவர் கூடுதலாக முட்டை பரோட்டாவும்  சாதா பரோட்டாவும் எனும் நூல் பற்றியே மிக ஆர்வத்துடன் பேசினார். ஜோய் அவர்கள் நீண்டகாலமாக பிரான்சில் வாழ்ந்து வருபவர். இலக்கியத்திலும், அரசியலிலும் ஆர்வமுள்ளவர். கவிதை எழுதும் ஆற்றலும் கொண்டவர். ‘அந்தக் கரையில்’ ‘எரிவதும் சுகமே’ என்ற தலைப்பில் இவரது இரண்டு கவிதைத் … Continue reading

‘கூண்டு’ (வாசிப்பு மனநிலை விவாதம் -3)

வாசுதேவன் அவர்கள் கார்டன் வைஸ் அவர்களின் ‘கூண்டு’ நூல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். வாசுதேவன் அவர்கள் பிரான்சில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்து வருவதோடு, ‘மொழிஆக்கப்’ படைப்பாளியாகவும் தன்னை அடையாளப்படுத்திவருபவர். அவர் பிரஞ்சு இலக்கியங்களையும், பிரான்சின் வராலாற்று நூல்களையும் ஆழமாக கற்றுவருபவர். ஐரோப்பிய அறிவொளிக்கால வரலாற்றில் பிரான்சின் வகிபாகம் குறித்தும் ஆர்வமான தேடல்களை மேற்கொண்டவர். ‘தொலைவில்’எனும் தலைப்பிலான இவரது கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது. அண்மைக்காலமாக நவீன ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் … Continue reading

வாசிப்பு மனநிலை விவாதம்- 3

வாசிப்பு மனநிலை விவாதம் 3வது தொடர் கடந்த ஞாயிறு (23-09-2012) நடைபெற்றது. கடந்த 2வது விவாதத்தில் கலந்து கொண்டவர்களோடு மேலும் பலர் அதிகமாக கலந்துகொண்ட  சந்திப்பு இதுவாக இருந்ததில் மேலும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக பல இளைஞர்கள் புதிதாக கலந்து கொண்டதென்பது இவ்வாறான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதற்குரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பில் விவாதிக்கப்பட இருந்த இரண்டு நூல்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை உதயகுமார் அவர்கள் முன்வைத்தார். … Continue reading

குழந்தைவேல் அவர்களது நாவலான ‘கசகறணம்’மீதான வாசிப்பு பகிர்வு.

நாவலின் பேசுபொருள் குறித்த விவாதங்கள், விமர்சனங்களுக்கும் அப்பால், படைப்பாளியின் சமூக அக்கறையும் நாவலின் பிரதான கதைவிரியும் களத்தில் உலாவரும்  இரு சமூகங்களுக்கிடையிலேயான அன்பு, பாசம், நட்பு, விரோதம், பிரிவு, கலாச்சாரம் எனும் மானிடப் பகிர்வின் நெருக்கத்திற்கான பண்புகள் என அனைத்தையும்…, படைப்பாளியின் இலக்கிய மன வெளியின் வாயிலாக இறங்கிவந்த ஒரு  புனைவுச் சித்திரமாக மட்டும் ஒத்துக்கொள்ள எனது புத்திக்கு உடன்பாடில்லை. இப் புனைவுப் பிரதியில் ஆழப்புதைந்து வாசகர் கண்ணுக்கு புலனாகாது … Continue reading

‘ஆறாவடு’

-அசுரர – 22-7-2012 இல் நடைபெற்ற ‘வாசிப்பு மனநிலை விவாதம்-2’ நிகழ்வு பற்றிய விபரம். எமது ‘பாரம்பரிய நடைமுறைக்கு ஒழுக’ குறிப்பிட்ட நேரம் பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்த நிகழ்வானது 1மணித்தியாலம் தாமதித்தே ஆரம்பமானது.