ஏன்!!! எதனால்!!!

-தேவதாசன்- முகப்புத்தகத்திலும் மேலும் சில சமூக வலைத்தளங்களிலும் வந்த இச்செய்தி மிக வேதனையையும், எமது ‘சமூகத்தின்மீதான’ வெறுப்பும் கோபமும் தொடர்வதற்கே வழிகோலியது. காரணம் தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனுக்கு நடந்த ஒரு சமூகபுறக்கணிப்பாகவே  இதை கருதத்தூண்டியதால் . தேவரயாளி இந்துக்கல்லூரிக்கு எமது சமூகத்திலிருக்கும் ஒரு ‘அடையாளம்’ இதற்கும் காரணமாக இருக்குமோ எனும் சந்தேகம் எனக்கு இயல்பாகவே உறுத்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இச்சமயத்தில் நான் யாழ்ப்பாணத்தில் நிற்பதால் இதன் விபரத்தை … Continue reading

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ‘மாமனிதன்’ எம் சி சுப்பிரமணியம் அவர்களின் 27வது நினைவுதினம் 12/01/2016

அ.தேவதாசன் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி பிரான்ஸ் 12-01-2016   “அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது – ஆனால் அது நேர்மையானது. அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது.”   : எம்.சி.சுப்பிரமணியம் இலங்கை வடபுலத்து சாதிய கட்டமைப்பு என்பது இன்றுவரை அசைக்கமுடியாமலே இயங்கி வருகிறது. ஒரு சமூகத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது கல்வி, பொருளாதாரம் ஆகும்;. யாழ்ப்பாண வட புலத்தில் சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது மிக மிக … Continue reading

சாதிய ஒடுக்குமுறையை, தீண்டாமை பாகுபாட்டை கேள்விக்குள்ளாக்கும் சக்தியா… தமிழ் தேசியம்!

“ஆயிரக் கணக்கான சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் மக்கள் எப்படி ஒரே தேசமாக ஆவார்கள்? தேசம் என்ற சொல்லின் சமூகவியல்ரீதியிலான அர்த்தத்திலும் உளவியல்ரீதியிலான அர்த்தத்திலும் நாம் இன்னும் ஒரு தேசமாக உருவெடுக்கவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் உணர்கிறோமோ அவ்வளவுக்கு நமக்கு நல்லது. அப்போதுதான் ஒரே தேசமாக நாம் உருவாவதன் அவசியத்தை உணர்வதுடன் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் தீவிரமாக நாம் சிந்திப்போம்.” (அம்பேத்கர்) -தேவதாசன்- இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் தமிழ் … Continue reading

இலங்கையில் நடக்கவிருக்கும் 40வது இலக்கியச் சந்திப்பிற்கு எதிராக வடிவமைக்கப்படும் ‘அறமும்’ ‘ஜனநாயகமும்’.

-தேவதாசன்- பிரான்சில் நடந்த 38 வது இலக்கியச் சந்திப்பில் அடுத்த இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பத்தை கோரியபோதே அதற்கு எதிராக அங்கு நடத்தவது  ஒரு அறம் சார்ந்த செயல்பாடல்ல என்பதாக ஒரு சிலர் தமது அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக  இலங்கையில் இலக்கியச்சந்திப்பு  நடத்துவதென்பது ஜனநாயக அறம் சார்ந்த விழுமியங்களுக்கு எதிரான துரோக நடவடிக்கையாக தற்போது மேலும் ஒரு சிலரால் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்து வருகின்றேன்.

மேற்குலகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ‘புலம் பெயர் தமிழர்’.

-தேவதாசன்- இலங்கை தமிழர்களிடம் காணப்படும் வெள்ளைக்கார விசுவாசத்தைப்போல வேற எந்த இனமக்களிடம் இருக்குமோ எனச் சந்தேகப்படும் அளவுக்கு நம்மவர்கள்  மேற்குலகத்திடம் மண்டியிட்டுக் கிடக்கின்றனர். இங்கிலாந்து இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் தமது பதவிக்காகவும் , உயர்வுக்காகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேட்டுக்குடியினர் மிக விசுவாசமாக  நடந்து கொண்டதன் தொடர்ச்சியோ என்னவோ இன்றுவரை அப்பணி தொடர்கிறது. அன்றைய காலத்தில் ஏகாதிபத்திய அரசின் அதிகாரமேலாதிக்கத்திற்கான ‘சூழ்ச்சிகள்’ எதையும்  தெளிவாக புரியாத நிலையில் வெள்ளைக்கார விசுவாசம் … Continue reading

அண்ணன் சீமான் அவர்களுக்கு…..! அன்பான வேண்டுகோள்.

ஈழத்தமிழர்கள் சார்ந்து உங்களது செயற்பாடுகளை  தொடர்ந்து அவதானித்து வருபவன் என்ற வகையில் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். உங்களிடம் சில சந்தேகங்களை கேட்பதோடு, சில ஆலோசனைகளை வழங்குவதன் நோக்கமாகவே இக்கடிதம் அமைகின்றதென்பதை முதற்கண் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். திரைப்பட இயக்குனரான நீங்கள் ஈழத் தமிழர்களதும், உலகத்தமிழர்களதும் பற்றாளனாகவும், பாதுகவலனாகவும் உலாவி வருகின்றீர்கள். அதுமட்டுமா! பிரபாகரனின் ‘வாரிசாகவும’  தந்தை பெரியாரின் பேரனாகவும் கூட உங்களை அடையாளப்படுத்தி வருகின்றீர்கள். தென்இந்தியத் தமிழர்களையும், குறிப்பாக அங்குள்ள … Continue reading

தலித் சமூகங்களின் இன்றைய நிலை

2010 ஒக்டோபர் மாதம்  தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்கள் இலங்கை சென்று  பெறப்பட்ட  சில  தகவல்கள்.

’77’க்குள் புதைந்து கிடக்கும் கூட்டமைப்புக் கூத்தாடிகள்

__சித்தன்__ ஏப்ரல் 1ஆம் திகதி அன்று ரி.பி.சி வானொலியில் திரு. மாவை சேனாதிராசா அவர்களின்  உரையாடலின்  பிரதிபலிப்பாய்….. மாவை சேனாதி அண்ணா.., இரண்டு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் நேயர்களின் எல்லாக் கேள்விக்கும்  படக்கு படக்கெண்டு ஒரே பதிலை  திரும்பத் திரும்ப  முழங்கிக்கொண்டே இருந்தீங்க. யார் என்ன கேள்வி கேட்டாலும்  இழுத்து  ஈச்சு  சொன்னதையே  சொல்லிச் சொல்லி ஒரு மாதிரி இரண்டு மணிநேரத்தை சமாளிச்சிட்டீங்க உங்கட  பொலிற்றிக் ரெக்னிக் மிக அபாரம் … Continue reading

அறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள்

நேர்காணல்: அ.தேவதாசன் தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் … Continue reading