சமகால சாதிய சமூகத்தில் கல்வியும் பண்பாடும்

அகல்யா .பிரான்சிஸ்கிளைன்

“ஒடுக்கப்படும் மக்களை பகுப்பாய்வு செய்யும் போதுநாங்களும் அவர்களில் ஒருவராக இருந்து  பகுப்பாய்வு செய்ய வேண்டும் ஏனெனில்ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒடுக்கப்பட்ட மக்களை விட அதிகம் புரிந்து கொண்டவர் யாராக இருக்க முடியும். ஆதிகாரத்தின் கொடுமைகளையும் புறந்தள்ளல்களையும்ஒடுக்கப்பட்டவர்களை தவிர அனுபவித்தவர்கள் வேறு யாராக இருக்க முடியும். எனவே தான் நாமும் அவர்களில் ஒருவராக இருந்து பகுப்பாய்வு செய்யும் போது தான்  அவர்களின் பிரச்சனைகளை ஆழமாக விளங்கிக் கொள்ளலாம்”

சமூகமாற்றத்திற்கு ஏற்ப சாதிய கட்டமைப்பும் இன்று புதிய மாற்றத்தை எடுத்துள்ளது. ஆரம்ப காலத்தினைப்போன்று சாதிய தீண்டாமைகளும் புறந்தள்ளல்களும் வெளிப்படையே தெரிவதில்லை. வெளியில் பார்க்கும் போது வன்முறையற்ற நிலையில் ஓர் மௌனமான உறங்கு நிலையில் மிகவும் சாதுரியமாக சாதியக் கட்டமைப்பு புதுப்புது வடிவங்களில் இன்று மேலோங்குகின்றது.சாதியம் சமூகத்தில் இல்லை அதன் தாக்கமும் பாதிப்பும் எமது சமூகவாழ்வில் இல்லை அதனால் அதைப்பற்றி பேசவோ எழுதவோ தேவையில்லை எனக்கூறுபவர்களை 3 வகையாக நோக்கலாம்.

  1. சாதிய கட்டமைப்பை ஆதரிக்கும் பழமைவாதிகள்
  2. தேசியம் பற்றி கதைப்போர் சாதிபற்றி கதைத்தால் தேசிய ஒற்றுமை குழம்பிவிடும் என எண்ணுவோர்
  3. ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து கல்வி பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தவர்கள்.

சமகல அரசு சாதி பாகுபாடு ஒடுக்கு முறைகளுக்கு எதிராக எந்த வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. சாதிய புறந்தள்ளல்கள் இடம் பெற்றபோதும் அவர்கள் கண்டும் காணாது போல் இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் அனைவரும் அதிகாரம், செல்வாக்கு, உயர்ந்த அந்தஸ்த்து முதலியவற்றைக் கொண்ட நிலச்சுவார்ந்தர்களான வெள்ளாளார்களாக விளங்குகிறார்கள்.

சாதிய ஒடுக்குமுறை ஆனது சமூக ஒடுக்கு முறை வர்க்கச் சுரண்டல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது. எனவே தமது அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டவர்களை சுரண்டிக் கொழுத்த ஒடுக்கும் வர்க்கமோ அதே அதிகாரத்தினைக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களையும் தன்னையும் இந்த அநீதியிலிருந்து மீட்டுக் கொள்ள முடியுமென்று ஒருபோதும் உணர்வதில்லை ஒடுக்கப்பட்டவர் தம் நலிவிலிருந்து முளைத்து மேலெலும் வலுவின் அதிகாரத்தின் மூலம் மட்டுமே இருவரையும் விடுவித்து விடுதலைப் பேற்றை அடையமுடியும்.
போர் காலப்பகுதியில் இனவிடுதலையே மேலோங்கி இருந்தது, போரின் நிமித்தம் மக்கள் வெவ்வேறு இடங்களில் இடம் பெயர்ந்து வசித்தார்கள். இன்று போர் முடிந்து மீள் குடியேற்றத்தின் பின்னர் மக்கள் தம் சொந்த இடங்களில் குடியேற தொடங்கிய பின்னர் சாதியம் மீண்டும் தலைவிரித்தாடுகிறது.

ஒரே சாதிக்குழுவினர் ஒரே இடத்தில் வசித்துவருகிறார்கள் இவர்களின் ஊரை வைத்து சாதியத்தினை அடையாளப்படுத்தி கொள்வார்கள். வேளாளர் வசிக்கும் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் காணி வாங்க முடியாது அவ்வாறு இல்லையெனின் ஒரு சிலர் வாங்கினால் அவர்கள் அவ்விடத்தில் வாழ்வதற்கு பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள். அன்மையில் அச்சுவேலி பாரதிவீதியை சேர்ந்த பெண்னொருர் வெள்ளாளர் வசிக்கும் பகுதியான பத்தமேனியில் காணிவாங்கி குடியுள்ளார். இதை விரும்பாத அருகிலுள்ளவர் ஒழுங்கையின் ஊடாக போகவிடாது தகராறு செய்து சாதிப்பெயர் கூறி சண்டைபிடித்தார் பினனர் அப்பெண்; மின்சாரத்தை பெற வேலை செய்த போது மின்சார சபைக்கு முறையீடு செய்துள்ளார் இவர்களுக்கு இப்பாதை சொந்தமில்லை  இதனால் அப்பெண்  மின்சாரம் பெற்றுக் கொள்ள பலசவால்களை எதிர் கொண்டார். இவை போன்ற பல பிரச்;சனைகள் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளன ஒவ்வொரு முறையும் ஆனால் வெளியில் வராமல் மௌனமான நிலையில் இடம் பெறுகின்றன.

  • கல்வி
    நிலவுடமைக்காலத்தில் வர்ணாச்சிரம தர்மத்தின் அடிப்படையிலான கல்வி பொதுவாகவே உழைக்கும் மக்களுக்குமறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது.
    1930 காலப்பகுதியில் சம ஆசணம் சம போசனம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட போது பாரிய எதிர்ப்புகள் எழுந்தது 15பாடசாலைக்கு மேல் சாதிய வெறியர்களால் தீவைத்து கொழுத்தப்பட்டது.
    ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர் மிசனெறி பாடசாலைகள் தோற்றம்பெற்றன அதற்கு பின்னரே ஒடுக்கப்பட்ட மக்கள் சிலர் கல்வி கற்பதற்குரிய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் மேல்சட்டை அணியவோ ஒரே ஆசனத்தல் அமரவோ உரிமை கிடைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து கல்வி கற்று முன்னேறிய ஒரு சிலரும் கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களாவே காணப்படுகிறார்கள்.

 

ஆறுமுக நாவலார் அவர்களால் 1900ஆண்டளவில் 45பாடசாலைகள் உருவாக்கப்பட்டன அத்தனை பாடசாலைகளிலும் சைவ வேளாளர்களால் தான் கல்வி பயில முடிந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருவர் கூடகல்வி பயில முடியவில்லை.
1956ம் ஆண்டிற்கு பின்னரே அரசாங்கத்தினால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலப்பகுதிக்கும் பின்னரும் பல எதிர்ப்புக்கள் மத்தியிலே ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பயில்வதற்கு வாய்ப்புக்கள் கிடைத்தன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆரம்பகாலங்களிலிருந்து வந்த கல்விரீதியிலான ஒடுக்கு முறை பாரிய ஒன்றாக விளங்கியது இந்த நிலையில் இலவச கல்வி எல்லா மக்களுக்கும் என்று வழங்கியவுடன் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றமடைவார்கள்.ஏனெனில் இவ்வளவு காலமும் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்றதால் கல்வி பயில முடியாது இருந்த மக்கள் எல்லாமக்களுக்கும் கொடுக்கும் உரிமை போல் கொடுத்தால் எவ்வாறு அவர்களால் முன்னேற்றம் அடைய முடியும்.   ஏனெனில் அன்றிலிருந்து  இன்றுவரை காணி, கல்வி, அரசியல், பொருளாதாரம, அரசபதவிகளில் ஆதிக்கம் பெற்றவர்கள் வெள்ளாள சமூகத்தினர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசேட ஒதுக்கு முறை அன்று வழங்கியிருக்க வேண்டும். இவ்வளவு காலமும் மறுக்கப்பட்டிருந்த கல்வியை திடீர் என்று வழங்கியவுடன் எவ்வாறு அவர்கள் அதனால் பயன் பெற முடியும். கல்வி பொருளாதாரம் படைத்த ஒரு சிலரின் முன்னேற்றத்தினைக் கொண்டு எவ்வாறு எல்லா ஒடுக்கப்படும் சாதியினரும் முன்னேறியுள்ளார்கள் என்று கூறமுடியும்.

தமிழர் சமூகத்தின் கல்வி மேம்பாடு பணபாடு தொடர்பாக இன்று வரை புகழ்பாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதி அமைப்பின் கொடூரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியானது திட்டமிட்டே மறுக்கப்பட்டு வந்தது என்ற உண்மையை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதற்கு இன்றும் தமிழரிடையேயுள்ள பல கல்விப் புலமைசார் பேராசிரியர்களும் இன்று வரை தயக்கம் காடடியே வருகிறார்கள்.ஒடுக்கப்பட்டமக்களிலிருந்து கல்வி ரீதியாக முன்னேறினவர்களும் தம் மக்களிடமிருந்து இடைவிலகி தனித்துவாழ தொடங்கினார்கள்.இலவச கல்வி எல்லோருக்கும் கல்வி என்றும்; வெளிப்படையாக கட்டுரைகள் புத்தகங்கள்  எழுதிவிட்டு போகலாம் இவையாவற்றின் பயன்களும் அன்றிலிருந்து இன்றுவரை அதிகாரங்களை வைத்திருக்கும் ஆதிக்க சாதியினரும் பொருளாதார ரீதியில் முன்னேறின ஒருசில ஒடுக்கப்பட்ட சாதி மக்களும் தான் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்து. கிராமப்புறம் நகரச்சேரிகளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர் கல்வியினை பெறுவது பெரியதொரு சவாலாகவுள்ளது. அச்சுவேலி பத்தமேனியில் இரத்தினேஸ்வரி பாடசாலையை எடுத்துக் கொண்டால் இங்கு தரம் 1முதல் தரம் 9வரை வகுப்புக்கள் இடம் பெறுகின்றன. கல்வி பயிலும் அனைவரும் ஒடுக்கப்பட்ட சாதிவகுப்பினை சேர்ந்த கூலிவேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள.; இப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வி பயில்வது சவாலாகவுள்ளது. மற்றும் தரம் 9திற்கு பின்னர் இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பலர் கல்வியினை இடைநிறுத்தி தாமும் கூலிவேலைக்கு செல்கிறார்கள். ஆரம்பத்தில் வெள்ளாள சாதியினரால் கட்டப்பட்ட இப்பாடசாலை அவர்களின் பிள்ளைகள் மட்டும் கல்வி பயினறார்கள். பின்னர் ஒரு சில ஒடுக்கப்பட்ட பிள்ளைகளும் கல்வி பயின்றார்கள். இன்று வெள்ளாளர் சாதியினர் தம் கிராமத்தில் இருக்கும் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை ஏனெனில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பிள்ளைகள் எல்லோரும் அங்கு கல்வி பயில்வதால். இப் பாடசாலையினைப்போல இன்று பல பாடசாலைகள் கிராமப்புறங்களிலும் நகர்சேரிகளிலும் காணப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட சாதியினர் சிலரின் கல்வி முன்னேற்றங்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைபற்றிக் கதைக்க முடியாது. இவர்கள் எவ்வாறு தான் கல்வியில் முன்னேறினாலும் உயர் பதவிகள் அடையமுடியாதுள்ளார்கள். அவ்வாறு ஒருசிலர் அடைவதாயின் பாரிய சவால்களை இன்று வரை எதிர் கொள்கிறார்கள்.

பண்பாடு மனிதப்பண்பாடு என்பது வர்க்கம், சாதி, இனம்  பால்நிலை, மதம் ஒடுக்குமுறை கடந்து தன்னை மனிதனாக முன்னிறுத்தி நிற்றலே மனிதப் பண்பாடாகும். ஆனால் எமது சமூகத்தினர் மனிதப்பண்பாடுகள் அற்ற விலங்குகளாகவுள்ளனர். இவர்களின் பண்பாட்டில் சாதியாதிக்கம், மதம், ஆணாதிக்கம் என்பவற்றை கொண்டவர்களாக உள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார அரசியல் கல்வி தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு பண்பாட்டு அம்சங்கள் சமத்துவமாக பின்பற்றப்படுவது நிராகரிக்கப்பட்ட சூழலிலேயே ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்தனர்  இன்றும் கூட அவற்றின் நேரடி மறைமுகத் தாக்கங்களிலும் பாதிப்புகளிலுமிருந்து விடுபட முடியாத நிலையிலுள்ளார்கள் . வடக்கில் விவசாய உற்பத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களே கூலிவிவசாயிகளாகவும் குத்தகை விவசாயிகளாகவும் இருந்து வருகின்றனர். கூலி விவசாயிகளில் பெண்கள் பிரதான பாத்திரம் வகித்துவருகிறார்கள். ஆனால் அவர்களுடைய நாட் கூலி மிகக் குறைவாகவே பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வாறு தாழ்த்தப்பட்ட பெண்களின் உழைப்பு சாதி வர்க்கம் பெண் என்ற மூன்று நிலைகளில் சுரண்டி அபகரிக்கப்பட்டு வருகின்ற நிலை இன்று வரை நீடித்து நிலைக்கின்றது. குடும்பத்திற்கும் சாதிக்கும் தொடர்பு காணப்படுகின்றது. கூட்டு குடும்ப வாழ்க்கை முறையே எம் சமூகத்தில் காணப்படுகின்றது.  குடும்ப உறவுகள்  பரம்பரை பரம்பரையாக சாதிய கட்டுமானம் இறுக்கமாக கட்டிக்காக்கப்படுகின்றது. திருமணத்தில் சாதிய கட்டமைப்பு இன்று வரை இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஆதிக்கம் பெற்ற வெள்ளாள சாதியத்தை தமிழ் பண்பாடாக கொண்டுள்ளார்கள் மற்றும் வெள்ளாள ஆணாதிக்கத்தை தமிழ் பண்பாடாக  காட்டுகிறார்கள். அப் பண்பாடே நல்ல பண்பாடு என மக்கள் மீது திணிக்கிறார்கள். மகிலாவை ஒரு பெண் கட்டி அணைத்ததை தமிழ் பண்பாட்டு காவலர்கள் படு பிற்போக்கு தனமாக விமர்சிக்கிறார்கள். மற்றும் ஒரு பெண் தனியேவீதியால் போக முடியவில்லை இன்று. எம் இந்து பண்பாட்டு கலாச்சாரமானது சாதியாகவும் இனவாதமாகவும் சமூகத்தில் மேலெலுந்துள்ளன. பெண்ணை ஆணின் அடிமையா வாழும்படி நிர்ப்பந்திக்கின்றது. அடுத்த தலைமுறைக்கு இந்த ஆணாதிக்க சாதிய கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்வது பெண்ணின் சமூக நடத்தையாக இருத்தலே தமிழ் பண்பாடாக காடடுகிறார்கள். கோவிலுக்குள் நுழைவதற்கு ஆரம்பத்தில் போராட்டங்கள் நடாத்தினார்கள். ஆனால் இன்று ஒடுக்கப்படும் மக்களும் தமது சாதிக்கொரு கோவில் என கட்டி திருவிழாக்கள் பெரிதாக செய்;கிறார்கள். ஏதிர்ப்பு  போராட்டங்கள் எல்லாம் இன்று  கேள்விக்குறியாக காணப்படுகின்றது. ஏனெனில் கோவில்கள் இன்று சாதிக் ஒன்றென கட்டுகிறார்கள். ஆரம்ப காலங்களில் சிறிய கோவில்களை வைத்து தாமே பூஜை செய்து வழிபட்டவர்கள் இன்று கோவில்களை பெரிதாக்கி ஆகம விதிப்படி பிராமணர்களை கொண்டு பூஜை புரிகிறார்கள.; இதனால் பிராமணர்களின் ஆதிக்கமும் தழைத்தோங்குகிறது.
எழுதுமடடுவாளில் வடத்தல் பளை அம்மன் கோவில் கட்ட பணம் கொடுத்தது பள்ளர் என்னும் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் வெளாளர் அக் கோவில் தேரை தொடக்கூட அவர்களை அனுமதிக்கவில்லை. கோவில் கட்ட காசு வாங்கும் போது மட்டும் சாதி தெரியவில்லை போலும் கிறிஸ்தவ ஆலயங்கலும் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு கோவில் என  பிரித்து கட்டப்பட்டுள்ளன. அவர்களிடமும் சாதிக்கொரு மயானம் தான் கிராமங்களில் காணப்படுகின்றது.
இன்று ஒடுக்கப்படும் சாதியினர் மேலுள்ள கீழ்நிலையான பார்வையும் புறந்தள்ளள்களும் எம் மத்தியில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. அன்மையில் நீர்வேலியில் வேளாளர் மற்றும் ஒடுக்கப்படும் சாதியினர் வசித்து வரும் இடம் ஒன்றில் தெருவில் உள்ள மரத்தின் கீழ் சிலை வைத்துவழிபட்டார்கள் காலப்போக்கில் உண்டியல் வைத்தார்கள் உண்டியலில் பணம் களவு போய் விட்டவுடன் தாழ்த்தப்பட்ட சிறார்களைபிடித்து நீங்கள் தான் அந்த பணத்தை திருடினீர்கள் என்று அடித்தார்கள். ஆனால் விசாரனையின் பின்னர் வேளாளர் சமூகத்தை சேர்ந்த பிள்ளைகள் தான் அப் பணத்தை திருடினார்கள்.

இங்கு நாம் நோக்கும் போது உடனே எந்தவித விசாரனையும் அற்று ஒடுக்கப்பட்ட சிறார்களை தண்டித்தார்கள். சமூகத்தில உயர் நிலையில் இருப்பவர்கள் தம் கலாச்சாரம் தான் பெரியது அவர்கள் தவறுகள் செய்ய மாடடார்கள்தாம் எந்த முடிவினை அவர்கள் எடுத்தாலும் சரியானது என்ற கீழ்த்தரமான எண்ணங்களை கொண்டிருப்பார்கள். சாதியத்திற்கு எதிராக எழுதுபவர்களும் கதைப்பவர்களும் ஆண்கள் தான் அதிகமாகவுள்ளார்கள. பெண்களுக்கு அதற்குரிய தளம் வளங்குவது மிகவும் குறைவாகவே உள்ளன ஏனெனில் எமது ஆணாதிக்க கலாச்சாரம் எப்பொழுதும் பெண்களை வீட்டில் பூட்டி வைப்பதே பெருமையாக கொள்கின்றது.

சாதியகட்டமைப்பை எதிர்த்து போராடுபவர்களும் தமது பிள்ளைகளுக்கு திருமணம் என்றவுடன் அதே சாதியிலே திருமணம் முடிக்கிறார்கள். மாற்று திருமணத்தை அவர்கள் ஆதரிப்பதில்லை
இன்று தமிழர் சமூகத்திலிருந்து சாதியம் அற்று போய் விட்டது என்று யாரும் அறுதியிட்டு கூறமுடியாது. ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் கம்யூனிஸ்டுக்கள் முன்னெடுத்த புரட்சிகர போராட்டங்களால் சாதியமும் தீண்டாமையும் தமது இறுக்கத்தன்மையை கையிழக்கிக் கொண்டது அன்றி முற்று முழுதாக அற்று போய்விடவி;லை. இன்று சுழற்சி வட்டமாக சாதிய கட்டமைப்பும்  புதிய கட்டமைப்பை எடுத்துள்ளது. எனவே இன்றும் சாதிய ஒடுக்கு முறைகளுக்கெதிரான போராட்டங்கள் மிகவும் அவசியமாகவுள்ளன.
“சமூக ஒடுக்குமுறைகள் எவ்வளவு தீயனவோ அதேயளவிற்கு ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒரு சமூகம் மறந்து போவதும் தீயது”

Bookmark the permalink.

Comments are closed.