அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் மலையக சமூகத்தை இழிவுபடுத்தும் வார்த்தை பிரயோகத்தின் ஊடாக அச்சமூகம் குறித்த தனது மனநிலை போக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மேட்டுக்குடி மனநிலை வெளிப்பாட்டை ஒரு சமூகத்தின் மீது வெளிப்படுத்தியவரான சிவஞானம் சிறீதரன் அவர்கள் வன்னி வாழ் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியாகவும் செயல்படுவதென்பது வேடிக்கையானதே.
அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை சிறீதரனின் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றது. காலங்காலமாக சமூக ரீதியாக இழிவுபடுத்தப்பட்டும், பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் சமூகங்களான எமக்கே மலையக மக்களின் மன வலியை, வேதனையை மிக ஆழமாக உணரமுடியும். சக்கிலிய நாயே என பேசிய சிவாஜிலிங்கத்தை கடந்து போன எமது யாழ் மேட்டுக்குடி சமூகம், தனது இடுப்பிலே தாங்கி வந்த சிறீதரனை மேலும் உயர்த்தி தோள்மீது காவிச்செல்லுமே அல்லாது அவரை கீழே போட்டுடைக்கப்போவதில்லை.
மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் சறீதரன் போன்றவர்கள் மக்களுக்கான,சமூகத்திற்கான ,
சமூக கட்டுமான அபிவிரித்திக்காக என எதையுமே மேற்கொள்ளாதபோதும் தொடர்ந்தும் ‘தங்களது’ பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் காரணம் என்ன!!!
எமது அனுபவத்திற்கு தெரிந்த ஒரே ஒரு காரணம்தான்…, சாதிய, பிரதேசவாத உணர்வுகளை தீட்டிக்கூராக்குவதொன்றே யாழ்மையவாத சாதிய மேட்டுக்குடி சமூகத்திற்கு உவப்பான காரியமாகும். இந்த அடிப்படை ஒன்றே எமது சமூகத்திற்கு போதுமானது இவர்கள் போன்றவர்களை தமது பரதிநிதிகளாக தொடர்ந்தும் தேர்ந்தெடுப்பதற்கு.

முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் சிறிதரன் எம்பிவடக்கத்தையான் என நான் சொல்லவில்லை நிரூபித்தால் பதவி துறப்பேன் …

Tharmalingam Siva 发布于 2017年7月16日

Bookmark the permalink.

Comments are closed.