இ.த.ச.மே.முன்னணி

Category Archives: இ.த.ச.மே.முன்னணி

மரண தண்டனை தீர்வல்ல…

file_225951_569797_vignette_une_1_

டிசம்பர் 30 ஆம் திகதி 2006 இல் காலை 8 மணி 55 நிமிட நேரத்தில் சதாம் ஊசேன் தூக்கிலிடப்ப்டார். வயது 69. 1979 இல் இருந்து 2003 இல்@ அமரிக்க இராணுவத்தால் கைது செய்யப்படும் வரை ஈராக்கில் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வந்தவர். இவரது சர்வாதிகார ஆட்சியில் ஈராக்கில் வாழும் சிட் இனமக்களும், குர்திஸ் இன மக்களும் மிகம் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியவர்கள். 1988இல் குர்திஸ் இன மக்கள் மீது விசவாய்வை பிரயோகித்து பல்லாயிரக் கணக்கான மக்களை கொலை செயயக் காரணமானவர். 148 சிட் இன மக்களை 1982 இல் கொலை செய்ததற்காகவே இவருக்கான மரண தண்டனை எனக் கூறப்படுகிறது. ஆனால் இவரது கொலைகளின் அளவுகளோ மிக நீளமானதும், கொடூரமானதுமாகும். இதில் அவரது உறவினர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் அடங்குவர். இவருக்கான மரண தண்டனைத் தீர்ப்பானது 2006 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி வழங்கப்பட்டது. இவரது மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்ட பின்பே தூக்கிலடப்பட்டார். Continue reading →

தலித் அரசியல் அறிக்கை

லக மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பது அரசு, சொத்து, குடும்பம் எனப் பிரிவினைகள் தோன்றியபோதே நிலை பெறத் தொடங்கியதாக நாம் வரலாறுகள் மூலமாக அறிகிறோம். இவ்வாறான சமூக வேறுபாடுகளை  பொருளாதார (வர்க்க) வேறுபாடாகவும், பாலியல் வேறுபாடுகளெனவும் இருவகையாகப் பிரிக்கலாம். இந்த வகையில் உலகிலுள்ள பல சமூகங்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குமிடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. உலக சமூகங்களுக்கிடையேயான பொதுவான  வர்க்க, பாலியல் வேறுபாட்டை ‘’வர்ண சாதிய’’ அடிப்படையில் மாற்றிய நிகழ்வானது இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குள்தான் நிலைத்து நீடிக்கிறது. Continue reading →

‘தூ’ இணையத்தளத்தின் ஆரம்ப அறிமுகம்

அறிமுகம்

இன்றைய தமிழ்ச் சமூக கொதிநிலையாய் துலங்குவது ‘தமிழ்த் தேசியமும்’ அதன் வழிபாட்டு அடிமைச் சேவகமுமே.

பேசப்படும் தமிழ்த் தேசியக் கருத்தியல் தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாக தலித்துக்கள், முஸ்லிம்கள், கிழக்கு வாழ் தமிழர்கள், மலையக மக்கள் உள்ளனர். மக்களை மந்தைகளாக குவியவைத்து நாற்திசையும் துப்பாக்கிக் குழல்களால் அணைத்து மண்டியிடவைத்து தமிழ்த் தேசியப் பஜனைபாட நிற்பந்திக்கிறது. Continue reading →

Edit

Category Archives: இ.த.ச.மே.முன்னணி

தலைவர் என்ன சொன்னர்

அடிபணிந்த புகிலிட தமிழ் மக்களே உங்களை அரவணைத்துக் கொள்வதற்கு நான் கிஞ்சித்தும் தயங்கியதில்லை. அறிவின் ஆதாரத்தை ஆய்வு செய்ய முயற்சிக்காது, எனக்கு அடிமையாகிவிட்ட உங்களை அடிமைப்படுத்திய நானே ஆறுதலும் அளிக்கிறேன்.

உலகப் பரப்பெங்கும் பரந்து, சிதறி வாழும் புகலிட தமிழ் மக்களே, ஒளி நிறைந்ததும், உலகளாவியதும், முடிவற்றதும், முழு முதலானதுமாகிய எனது விசுவரூபத்தை, எனது கருணையால் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27 ஆம் நாள் நீங்கள் காணப் பெரும் பேறு பெற்றுள்ளீர்கள்.

இலங்கையை பூண்டோடு அழிக்கும் வல்லமையுடைய ‘காலம்’  ‘நான்’. இலங்கையை அழிக்க முனைந்து விட்டேன். எனக்கு கருமம் செய்யாது (!!!) என் மீது அய்யப்படுவது, கேள்வி எழுப்புவது, மதிப்பீடு செய்வது போன்ற இழி செயல் புரியும் தேச விரோத கருத்துடையோர் எவருமே உயிர் வாழ முடியாது.

எனது மாவீரக் குழந்தைகள் உடல் மட்டுமே அழியும் தன்மையுடையது. அவர்கள் ஆன்மா நிலையானது, அழிவற்றது, அளவிட முடியாதது. போர்க்களத்தில் நடைபெறும் கொலைகள் சித்திரவதையாகவும், வேதனை பொருந்தியதாகவும் இருக்குமென புகிலிட தமிழ் மக்களாகிய நீங்கள் ஐயமுறலாம். ஆனால் எமது மாவீரர்களுக்கோ வேதனை உணர்வு நீடித்திருக்காது. ஏனெனில் அவை நிலையற்றவை!!. எனவே எனது அன்பிற்கும், பாசத்துக்குமான புகலிட வாழ் தமிழ் மக்களே நான் போரில் ஈடுபடுவதிலிருந்து பின் வாங்குவதற்கு எக்காரணமுமில்லை.

அளவிட முடியாத ஆற்றலும், வரம்பற்ற வல்லமையும் கொண்டவன் நான். புகலிட வாழ் தமிழ் மக்களே என்னை நீங்கள் முன்புறமாகவும் வணங்குங்கள், பின்புறமாகவும் வணங்குங்கள், அனைத்துப் பக்கங்களிலும் வணங்குங்கள். நான் அனைத்திலும் இருக்கிறேன், அனைத்துமாகவும் இருக்கிறேன். எமது சொர்க்க பூமியான தமிழ் தேசத்தில் வாழும் மக்களைப்பற்றி நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.அவர்கள் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்கள். உங்கள் புலன்களுக்கு தெரிவதெல்லாம் அவர்கள் உயிர் வாழ்வதான வெறும் அடையாளம் மட்டுமே…எனது தாகம் உயிர்த் தாகம். Continue reading →

“இலங்கை தலித் சமூகங்களுக்கு எதிரான சதிகளின் நவீன வடிவம்”

09 novembre 2007

 

 

சாண் ஏற முளம் சறுக்கும் நிலை…
இது எமது தலித் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக தொடரும் மரபாகவே நீடிக்கின்றது. Continue reading →

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாட்டிற்கு சுவிசிலிருந்து வருகைதந்த நண்பர் ரவி அவர்களின் தலித் மாநாட்டு நிகழ்வுகள் பற்றிய பார்வை

30 octobre 2007

 

 

 


இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்… கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு… அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்… முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள் நாற்திசையும் வரைந்த கோடுகளில் ஆர்வலர்கள் புள்ளிகளானார்கள். வழமையாகவே நேரத்தைக் கடைப்பிடிப்பதில் பேர்போன எமது பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்தின் வேலைநிறுத்தம் வேறு.  நேரத்துக்கு வரத்துடித்தோரையும் அங்கங்கு ரயில் நிலையங்களிலும், வாகனநெரிசலிடை துண்டுகளாய்த் தெரிந்த வீதிகளிலும் காக்கவைத்து அரிப்புக்கொடுத்துக் கொண்டிருந்தது வேலைநிறுத்தம். Continue reading →

தலித் மாநாட்டுக் கட்டுரை -ராகவன் –

தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

– ராகவன் (லண்டன்)

(இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் இரு நாட்கள் ( 20 – 21ஃ10ஃ2007) பிரான்ஸ் – பாரிசில் நடத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டில் முதல் நாள் அமர்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

“நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாத வரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப் போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்”  – அம்பேத்கர்

இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்று இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இன – தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்.

தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் யாழ்ப்பாணத்திலேயே அரும்பி வேர்விட்டு விருட்சமாகியதால் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையையும் ஒடுக்கும் சாதியினரின் ஆதிக்கத்தையும் அதன் அரசியல் அதிகார வேட்கையையும் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

தமிழத் தேசியவாதம் குறுகிய நோக்கம் கொண்டது. அது தமிழர் என்று தான் வரையறுக்கும் மனிதர் அல்லது மனித குழுவினர் அல்லாதவரை அந்நியராக, விரோதியாகக் கருதுகின்றது. தேசியவாதத்திற்கு உலகளாவிய பார்வை கிடையாது. அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது.

தமிழ்த் தேசியவாதம் சாதிய அடிப்படையிலான சமூக – கலாச்சாரக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனெனில் அதன் அடிப்படை பிறப்பு, இரத்த உறவு, பாரம்பரிய நிலம் போன்ற சாதியக் கருத்து நிலைகளே. பிறப்பு உனது முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகளால் நிச்சயிக்கப்படுகிறது என்ற சனாதன சைவக் கோட்பாட்டால் நியாயமாக்கப்படுகிறது. இதுவே சாதியின் அடிப்படை என வேதம் சொல்கிறது. இரத்தம் தூய்மையானது, அது மற்ற சாதிகளுடன் கலந்தால் அழுக்காக போய்விடும் – இங்கு இரத்தம் என்பது விந்தும் சேர்ந்தது – என்கிறது. சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழத் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும். Continue reading →

முதலாவது தலித் மாநாடு -பிரான்ஸ் –

நடைபெற்ற தலித் மாநாட்டு விபரம்

 

 

 

20-10-2007 இல் பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாடு மிக நல்ல முறையில், பல்வேறுபட்ட கருத்தியல்களையும் உள்வாங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. பிரான்சில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின்  கடுமையான வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து வசதிகள் அனைத்துமே மிகச் சிரமத்திற்குள்ளான நாட்களில்தான் தலித் மாநாட்டு நாட்களும் அதற்குள் சிக்கிக் கொண்டது. 100 க்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என நம்பிக்கை கொண்டிருந்தபோதும். மேற்படி பிரான்சின் கடும் வேலை நிறுத்தச் சூழலையும் பொருட்படுத்தாது, மிகச் சிரமப்பட்டு 78 பேர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததானது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரின் பணிகளின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களுக்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

 

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரின் இம்முயற்சிக்கு  ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், கொலை வன்முறை போன்ற கலாச்சாரங்களை அகற்றுவதற்குமான முயற்சியில் ’தமிழ்த் தேசிய விடுதலை’ எனும் கருத்தியலில் செயல்படும் தமிழ்க் கட்சிகளும் பத்திரிகை ஊடகங்களும், இணையங்களும், ரி.பி.சி வானொலி, உட்பட அனைவருமே தலித் மாநாட்டுக்கான அறிவிப்புக்களையும் அதுபற்றிய விவாதங்களையும் மேற்கொண்டதற்காக இ.த.ச.மே. முன்னணி தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. Continue reading →

தலித் மாநாட்டுக்கட்டுரை- யோகராஜா –

சுவிசிலிருந்து தோழர் யோகராஜா அவர்கள் தலித் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டும் இறுதியில் அவரால் வரமுடியாது போய்விட்டது. இருந்தும் மாநாடு சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார். அவர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்விற்கு  தனது பங்களிப்பாக ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். அக்கட்டுரை மாநாட்டின் இரண்டாம் நாள் கிடைத்திருந்தும் அவரது கட்டுரையை மண்டபத்தில் வாசிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதற்காக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மிகவும் வருந்துவதோடு அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றனர்.

அவரது அக்கட்டுரையை கீழே பதிவு செய்துள்ளோம் Continue reading →

1வது தலித் மாநாடு

பிரான்ஸ் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு   

               முன்னணியினரால்     நடாத்தப்படும்

‘’முதலாவது தலித் மாநாடு’’
நிகழ்வு மண்டபம்

SALLE RENCONTRE

Rue Jean François Chalgrin

95140 Garges Les Gonesse

France

காலம்- 20-10-2007 முதல் நாள் நிகழ்வுகள்

‘’ஜோவே போல் அரங்கு’’

நேரம் 10,00   வரவேற்புரையும், அறிமுகமும்
தேவதாசன்

11,00 தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும்
கருத்துரை– யோகரட்ணம், பரராஜசிங்கம் (ஜேர்மனி)
13,00 இடைவேளை (மதிய போசனம்)

‘’எம்.சி. சுப்ரமணியம் அரங்கு‘’

14,00 தமிழ்த்தேசியமும் தலித்தியமும்
கருத்துரை– அருந்ததி, ராகவன் (லண்டன்)
15,30 கலை நிகழ்ச்சி
தேனீர் இடைவேளை

16,00 சர்வதேசப்பார்வையில சாதியம்
கருத்துரை– அசுரா, புதியமாதவி (இந்தியா), அரவிந்

17,30 இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தலித்தியம்
கருத்துரை– கற்சுறா (கனடா), தேவா (ஜேர்மனி)
புதுமைலோலன் (சுவிஸ்)

21-10-2007   இரண்டாம் நாள் நிகழ்வுகள்

‘’எஸ்.ரி..என். நாகரட்ணம் அரங்கு‘’

9,30     கலந்துரையாடல் (முதல் நாள் அமர்வுகள் பற்றிய                                        விமர்சனங்களும்,  தலித் அரசியலின் எதிர்காலமும்
நெறிப்படுத்தல்- விஜி

11,30  தலித்துக்களின் பொருளாதார மேம்பாடு
கருத்துரை– பகவத்சிங் (ஜேர்மனி), சோமசுந்தரம்(ஜேர்மனி)
நடராஜா  (அவுஸ்ரேலியா)

13,00  இடைவேளை (மதிய போசனம்)

‘’கே.டானியல் அரங்கு‘’

14,00         கலைநிகழ்ச்சி

14,30  இலங்கை அரசியல் தீர்வுத்திட்டமும் தலித்துக்களும்
கருத்துரை– எம்.ஆர். ஸ்டாலின், சிவகுருநாதன் (கனடா)
பசீர் (லண்டன்)

நன்றியுரை
சுந்தரலிங்கம்

தொடர்புகளுக்கு

Vadu.world@hotmail.fr

Tel- 0661803690

Tel- 0660368804

கருத்தரங்கு

20 juillet 2007

 

 

 

 

 

 

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை ஜேர்மனியிலுள்ள சுருட்காட் எனும் நகரில்   ஐக்கிய ஜனநாயக முன்னணியினரால் ஓர் கலந்துரையாடல் மகாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டது. இச்செய்தியானது    எமது இணையத் தளத்தினூடாகவும்  அறிமுகப்படுத்தப் பட்டிருந்ததை எமது வாசகர்களாகி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஐக்கிய ஜனநாயக முன்னணித் தோழர்களும் நண்பர்களும் இவ்வாறான மகாநாடொன்றை  ஏற்கனவே  நடாத்தி முடித்தவர்கள். கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மகாநாட்டின் பிரதான நோக்கமும், ஏற்கனவே இவர்களால் நடாத்தப்பட்ட மகாநாட்டிற்கான நோக்கமும் ஓன்றாகவே இருந்தது.

 

அதாவது முதலாவது மகாநாடும் இலங்கை இனப்பிரச்னையின் தீர்வு சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் பற்றிய ஆலோசனைகளும் அதற்கான ஆதரவைப் பெறும் நோக்கமாகவும் இருந்தது. இரண்டாவது முறையாக நடைபெற்ற மகாநாட்டின் நோக்கமும் தீர்வுத்திட்டம் பற்றியதாகவே இருந்தது. ஆனால் இம்முறை இலங்கையிலிருந்து மூன்று கட்சியின் பிரதி நிதிகளாக, தலைவர் திரு. சித்தார்தன் (புளொட்) தோழர் சுகு (ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியினரின் செயலாளர் நாயகம்) திரு.ஆனந்தசங்கரி (த.வி.கூ தலைவர்) போன்ற கட்சியினர்  சமூகமளித்திருந்தனர். மேற்படி கட்சியினர் தாம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தின்  ஆதரவைப் பெறுவதற்காக ஐக்கியப்பட்டு செயல்படுவதாகவும், அத்தீர்வித்திட்டம் பற்றி பிறகட்சிகளுடனும் பேசி அவர்களும் அதற்கு ஆதரவு தரும்பட்சத்தில் அவர்களுடனும் இணைந்து தற்போதைய தமது ஐக்கியமுன்னணியை பலப்படுத்தவும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.Continue reading →

ஈ.பி.ஆர்.எல்.எப். (ப.நாபா) இன் கட்சி உறுப்பினர்களும் இலங்கைத் தலித் சமூக மேப்பாட்டு முன்னணியினரும் கலந்து கொண்ட… செய்தி

 


தமிழ் பேசும் மக்கள் பிரிவினரிடையே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளான சாதிய, பிரதேச சமூக முரண்பாடுகளையும் அவைகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக-மேலாதிக்க ஒடுக்குமுறைகள் யாவும் மறைக்கப்பட்டு,  சிங்கள அரசே எமக்கு முதலும், கடைசியுமான எதிரியென கட்டமைக்கப்பட்டது. இவ்வாறான கட்டமைக்கப்பட்ட  வரலாறு தந்த அனுபவங்கள் எம்மை தமிழ் சமூக அரசியலையும், அதைமேற்கொண்ட தமிழ்த் தலைமைகளையும் ஆழப் பரிசீலிக்கத் தூண்டியது. Continue reading →

எழுத்தாளரும், இலக்கியவாதியுமான பெளசருடனான சந்திப்பு

15 avril 2007

 

 

ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையானது காத்திரமான பங்களிப்பை செலுத்தி வருகிறது. 1996 ஆம் ஆண்டிலிருந்து கடுமையான யுத்த சூழல்தரும் பல்வேறு இம்சைகளிற்கும் முகம் கொடுத்து எம்.பௌசர் அவர்கள் ‘மூன்றாவது மனிதனை’ உயிர் வாழ வைத்திருக்கிறார். 1990 இன் முற்கூற்றில் ‘தடம்’ எனும் இலக்கிய சஞ்சிகையை நடத்தியவர். இன்று‘மூன்றாவது மனிதன்’ வெளியீட்டகம் ஊடாக பல்வேறு நூல்களையும் வெளியிட்டு வருகிறார். ஒரு படைப்பாளியாக, விமர்சகனாக, வெளியீட்டாளனாக, அரசியல் அவதானியாக பல் பரிமாணங்களைக் கொண்டவர் எம். பௌசர் அவர்கள். இவர் போர்ச்சூழல் தரும் அவலங்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற மூதூர் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் குறித்த அவலங்களை ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார். அந்த ஒளிப்பட வெளியீட்டு நிகழ்விற்காக ஐரோப்பா விஜயம் மேற்கொண்டபோது ‘தூ’ மின் சஞ்சிகை ஆலோசகர்களுடன் உரையாடியது.

 


 

Continue reading →

 

Category Archives: இ.த.ச.மே.முன்னணி

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்ளும் அவலநிலை’

– இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)–

21-09-2013 இல் நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் குறித்த எமது அபிப்பிராயங்களையும், அதில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிகப்பெரும்பான்மையில் வெற்றி கொள்ளவைத்தது தொடர்பாகவும் நாம் உடனடியாக எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. முன்வைக்கவும் முடியாத நிலை என்றும் கூறவேண்டியுள்ளது.

பலரைப்போலவே பேசப்பட்டுவரும் தமிழ்த் தேசியம் குறித்த கருத்தாடல்களிலும், அதனை ஒரு இனவாதக் கோசமாக முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் அரசியல்-சமூக செயல்பாடுகளில் மீதும் நம்பிக்கையற்றவர்களாகவும், அவர்களது பாரம்பரிய அரசியல் செயல்பாடுகளிலிருந்து எவ்வித மாற்றங்களையும் கண்டு கொள்ள முடியாத நிலையிலேயே நாமும் இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்-சமூகக் கோட்பாடானது தமிழ்பேசும் தலித்,முஸ்லிம்,மலையக மக்கள்  உட்பட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக தன்னை அடையாளப்படுத்திய வரலாறோ, அல்லது வெறும் ஒரு சம்பவமோ எப்போதும் நிகழ்ந்ததில்லை! தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தொடர்ச்சிகள் யாவற்றிலும்  இவ்வாறான அனுபவங்களையே நாம் பெற்று வந்திருக்கின்றோம். Continue reading →

இந்து நாகரீகமா..! நயவஞ்சகமா…?

ampedkar‘’தீண்டப்படாதவர்கள் என அழைக்கப்படுவதே மிகப்பெரும் அவப்பேறு, அதிலும் தன்னுடைய வாயாலேயே தான் தீண்டப்படாதவன் என்கிற அவமானத்தைப் பறைசாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நிலையானது, என்னுடைய கருத்துப்படி வேற எதனுடனும் ஒப்பிட முடியாத கொடூரமானதாகும். இந்த இந்து நாகரீகத்தைப் பற்றி தீண்டப்படாதவன் என்ன சொல்வான்? ‘இது நாகரீகமே அல்ல நயவஞ்சகம்’ என்று அவன் சொன்னால் அது தவறா?‘’
-அம்பேத்கர்-

(‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’- பிரான்ஸ்-)

இத்தலைப்பின்  மீதான உள்ளடக்க மதிப்பீடு பலருக்கும் உவப்பானதாக இருக்கப்போவதில்லை எனும் புரிதலுடனும், சாதிய சமூக வாழ்வியல் அனுபவங்களோடும் நாம் பேச முன்வந்திருக்கின்றோம். ‘இந்து நாகரீகமா- நயவஞ்சகமா?’என்கின்ற தலைப்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் தலைப்பே  இக்கட்டுரைக்கும் பொருத்தமானதாக எம்மால் கருதப்படுகின்றது. Continue reading →

‘நினைவேந்தல்’

va

இன்று பி.பகல் (03-03-2013 ) 4மணியளவில்  திரு எம். வைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. கணிசமான ஆர்வலர்கள்  நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அகில இலங்கைத் தமிழ் பெளத்த காங்கிரசின் தலைவரான திரு வைரமுத்து ஐயா அவர்களின் தலித் சமூக மேம்பாட்டிற்காக மேற்கொண்ட பணியை  முன்னிட்டு பிரான்சில் வாழும் கலாநிதி  கோ. ஆனந்ததேரர் அவர்களும் நினைவேந்தல் நிகழ்விற்கு சமூகமளித்திருந்தார்.va1 Continue reading →

1960 இல் ‘வேர்கொள்ளாத’ புனித பூமி……

–இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி–

மத்திய மகாணத்திலுள்ள தம்புள்ள நகரத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கது. 1960ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசல் இயங்கி வருகின்றது. அன்றிலிருந்து அப்பள்ளிவாசலானது பிரதேசசபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டும் இயங்கி வந்துள்ளது. இவ்வாறு நீண்டகாலமாக முஸ்லிம் சமூகமானது  தமது மதவழிபாட்டை பேணிவந்துள்ளது. Continue reading →

அதிகாரத்தை நோக்கி ‘உண்மையைத்தான்’ பேசுவோம்.

-இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)-

 

“மனித இனமானது புகழ்மிக்க மேம்பாடுடைய வரலாற்றை படைத்திருக்கின்றது. அது மேலும் மேலும் வளர்ச்சிகொண்ட ஓர் மனித இனமாக தன்னை அடையாளப்படுத்தி  முன்நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.ஆகவே மனிதனே வரலாற்றை படைக்கும் சக்திவாய்ந்தவன்“ என மனிதனின் வரலாற்றுச் (!!!) சாதனை  குறித்து சந்தேகத்திற்கிடமின்றி அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்  புகழ்மிக்க தத்துவாதியான தோழர் கார்ல் மார்க்ஸ் அவர்கள்.

இவ்வாறான மேற்படி கார்ல் மார்க்ஸ் அவர்களின் கருத்தியல் சூத்திரத்திலிருந்தே (formula)  ‘‘இயற்கை வரலாற்றை எவ்வாறு மானிட வரலாறு நிர்ணயிக்கும் ,அதேபோல் மானிடவரலாறு எவ்வாறு இயற்கை வரலாற்றை நிர்ணயிக்கும்   (பிரபஞ்ச அதிர்வுகளை)‘‘ என்பதான கேள்வியும் எழுகின்றது. ‘மானிட மேம்பாடு‘ குறித்த மார்க்சிய கதையாடல் (story) என்பது  வெறும் ஊகங்கள் தான் என்பதை இன்று எமது சர்வதேச அதிகார சக்திகள்  நரூபித்துக்கொண்டிருக்கிறது.

மனித இருப்பானது இயற்கையாகவே கலாசார தன்மையுள்ளதாகவும் அதேநேரம் காலாசார ரீதியாகவே மனித இருப்பானது இயற்கை அம்சமாகவுமே நிலைபெற்று வருகின்றது. இவ்வாறிருக்க மானிட ‘அரசியல் அதிகார வரலாறானது‘ வேறு ஓர் திசையில் எம்மை அலைக்கழித்தவாறும், தமக்குள்ளேயே வேற்றுமைகளையும், பகமைகளையும்,  வஞ்சக உணர்வுகளையும் பேணியவாறும் நகர்ந்து செல்கின்றது.

இவ்வாறான நயவஞ்சகமான, அதிகார நலன்களையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஓர் நடவடிக்கையாகவே UN panel report  என வெளிவந்துள்ள அறிக்கை குறித்த எமது அபிப்பிராயம் ஆகும்.

மேற்படி அறிக்கை குறித்து  மேற்குலக நாடுகளின்  தரவுகளையோ, அறிக்கையூடாக  மேற்குலக ஆளுமைகள், அதனது ஏகாதிபத்திய நலன்கள், அதற்கான பின்னணிகள் என்ன என்பது குறித்தோ நாம் விரிவாக பேசப்போவதில்லை. அல்லது இலங்கை அரசின் சர்வதேச ஆதரவு நாடுகளும் அதனது எதிர்பார்ப்புகளும் என்ன என்பது போன்ற அறிவியல் தர்க்க முற்போக்கு நியாயங்களையும் நாம் பேசப்பேவதில்லை. Continue reading →

‘இதுவும் மேட்டுக்குடிதான்’

எதிர்வரும் தை மாதம் இலங்கையில் நடக்கவிருக்கும் இலக்கிய ஒன்றுகூடலுக்கு எதிராக பிற்போக்கு சக்திகள் ஒன்று கூடி நாசவேலைகள் செய்து வருகின்றனர்.

இந்த நாசவேலைகளுக்கு முன்னரங்கில் நிற்பவர்கள் இங்கிலாந்திலுள்ள பத்மநாப ஐயர் அவர்களும், கனடாவிலுள்ள விருதுகள் வழங்கும் சபையின் தலைவருமான செல்வம் என்பரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Continue reading →

வேண்டுகோளும் எமது செயற்திட்டங்களும்

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சயேட்சையாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் விஞ்ஞாபனம்.

அன்பார்ந்த மக்களே

தமிழ் மக்கள் மத்தியில் வாழும்  உரிமைகுறைந்த எமது மக் களின் சமூக சமத்துவத்துக்காகவும் ஏனைய நலன்களைப் பேணுவதற்காகவும் தீவிர அக்கறையுடன் செயற்பட்டுவந்த ஒரு தாபனம் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை. இந்தச் சபையின் மதிப்புக்குரிய பெருந்தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் திரு. எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள். அன்னாரின் பாராளுமன்ற நியமன உறுப்பினர் பதவி, உரிமை குறைந்த எமது மக்களின் பிரச்சனகளை  அரசு மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கும், அதற்கான பரிகாரத்தைக் காண்பதற்கும் வெகுவாய்ப்பாக அமைந்திருந்தது. Continue reading →

சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள் நுழைய T.N.A முயற்சி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான  ஏற்பாடுகள் முன்பராக நடக்கத்தொடங்கிவிட்டது. பல்வேறு கட்சிகளும் தமது அரசியல் வேலைகளை செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.  கடந்த காலங்களில் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்றஅமைப்புகள் எமது சமூகத்தில் நிலவிவரும் சாதியத்திற்கு எதிரான  சமூக விடுதலைப் போராட்டங்களை  மேற்கொண்டு வந்தது.

அப்போராட்ட காலத்தில் அவ் அமைப்புகளுக்கு எதிராகவும் சாதிய சமூகத்தை பேணுகின்ற கட்சியாகவும் செயல்பட்டது தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் என்பதை நாம் அறிவோம். இவ்விரு யாழ் மேலாதிக்க மனம்படைத்த கட்சிகளின் சிந்தனையைக்  கடைந்தெடுத்த ‘நுரை’ தான் இன்றைய TNA என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

இன்றைய யாழ்ப்பாண சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையாக உள்ள சமூகம் தலித்துக்கள் தான். அதே நேரம்   ‘தமிழ்  தேசிய வேள்விக்கு’ பலிகொடுக்கப்பட்ட  பெரும்பான்மை இனமும் தலித்துக்கள்தான்.

இந்த TNA பிசாசுகள் பிரபாகரனுக்கு முன்னால் மண்டியிட்டு  சலாம்போட்டு பெற்ற பதவியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள்ளால்  நுழைந்து   பாதுகாக்க முற்றப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. Continue reading →

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் திஸ விதாரண விடம் தலித் அறிக்கை கையளிப்பு

tissa_v_thevathas_1_

6-4-2008 ஞாயிறு லண்டனில் இலங்கை ஜனநாய ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இலங்கை அரசியல் தீர்வுக்கான சர்வகட்சிப் பிரதிநிதகள் குழுவைச்சேர்ந்த 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன் தலைவர் திஸ விதாரணவும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின் ஏற்பாட்டாளர்களான இலங்கை ஜனநாயக ஒன்றியமானது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரையும் அழைத்திருந்தனர். இக்கலந்துரையாடலில் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் சார்பாக தலைவர் தேவதாசன் அவர்கள் உரையாற்றியதோடு தலித் அரசியல் அறிக்கை ஒன்றையும் கையளித்தார்.

‘தலித் அறிக்கை’ கையளிக்க முன் ஆற்றப்பட்ட உரை வருமாறு.

மதிப்புக்குரிய திஸ்ஸ விதாரண அவர்களுக்கும், சர்வகட்சி பிரதிநிதிகளுக்கும் மற்றும் சபையினருக்கும் வணக்கம்.

நான் உங்களிடம் கேள்விகள் கேட்பதற்கு இங்கு வரவில்லை. மாறாக ஓர் அறிக்கையினை உங்களிடம் சமர்ப்பிப்பதற்காகவே வந்துள்ளேன். உங்களுக்கு பல அரசியல் கட்சிகளும், மக்கள் மன்றங்களும் பலதரபட்ட அரசியல் தீர்வுத்திட்டங்களையும் அலோசனைகளையும் வழங்கியிருப்பார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டும் தீண்டாமைக் கொடுமைக்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகம், கடந்த கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் கொடூரமான யுத்தத்தால் மிகவும் துன்புற்று வாழுகிறார்கள். இம்மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதை வலியுறுத்தும் அரசியல் தீர்வுத்திட்ட ஆலோசனைகள் எதுவும் உங்களுக்கு கிடைத்திருந்ததாக நாம் அறியவில்லை.

1977ம் ஆண்டு வரை சாதியின் பெயராலொடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க பலவித போராட்டங்களையும் உயிர்த்தியாகங்களையும் செய்துள்ளனர். அப்போராட்டத்திற்கு உறுதுணையாக தமிழ் இடதுசாரிகளும், சிங்கள இடதுசாரிகளும் முஸ்லிம் முற்போக்கு சக்திகளும் உதவியுள்ளனர். 1977ம் ஆண்டு தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியதன் காரணமாக கடந்த முப்பது வருடங்களாக சாதிய விடுதலை பற்றிய பேச்சு பேசாப் பொருளாகி கிடப்பில் போடப்பட்டது. இந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களாக தலித் சமூக மக்களே உள்ளனர். உண்பதற்கு உணவும், இருப்பதற்கு வீடும், உழைப்பதற்கு தொழிலும் அற்றவர்களாக பெரும் துன்பத்தில் வாழும் தலித் மக்களுக்கு வெளிவரப்போகும் அரசியல் தீர்வுத்திட்டத்தில் அவர்களது சமூக அரசியல் பொருளாதரத்தை மேம்படுத்தும் முகமாக விசேட தீர்வுகள் முன்வைக்கப்பட்டு அது அரசியல் சட்டமாக்கப்பட வேண்டுமென இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

2006ம் ஆண்டு நவம்பர் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் சகல ஐரோப்பிய ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கி நடாத்தப்பட்ட இரு நாள் மாநாட்டில் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஓர் ‘தலித் அறிக்கையை’ வாசித்து வெளியிட்டோம். இவ்வறிக்கையானது 2007 ஒக்டோபர் மாதம் 20,21ம் திகதிகளில் பாரிசில் நடாத்தப்பட்ட 1வது தலித்மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்களின் ஒப்புதலையும் பெற்றுக் கொண்டது.அதனைத் தொடர்ந்து 2008 பெப்ரவரி 16,17ம் திகதிகளில் லண்டனில் நடாத்தப்பட்ட 2வது தலித் மாநாடும் இவ்வறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டது. நேற்றைய தினம் (05ஃ04ஃ2008) இம்மண்டபத்தில் நிகழ்ந்த இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் ( SLDF) கூட்டத்திலும் ‘தலித் அறிக்கையை’ முன் வைத்தோம்.

இன்று ஒரே மேடையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினரான உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எமது ‘தலித் அறிக்கையை’ உங்கள் முன்வைக்க கிடைத்த சந்தர்பமும் மிகவும் மகிழ்ச்சிக்குரியதே.

மதிப்புக்குரிய திச விதாரன அவர்களுடைய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சமாதானத்தினதும் ஜனநாயகத்தினதும் வருகைக்காக காத்துக் கிடக்கிறார்கள். எனவே நீங்கள் முன்மொழியும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் தலித் மக்களின் மன உணர்வுகளையும் புரிந்துகொண்டு ‘தலித் அறிக்கை’யில் எம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளையும் இடம்பெறச் செய்து சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வேண்டுமென்று கேட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை எமக்கு வழக்கிய இலங்கை ஜனநாயக ஒன்றியத்துக்கு நன்றியையும் தெரிவித்து, விடைபெற்று, தீர்வுக்காகக் காத்திருக்கிறோம்.

இரண்டாவது தலித் மாநாடு

20 février 2008

london_conference

    பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாட்டைத்தொடர்ந்து,இரண்டாவது தலித் மாநாடு லண்டனிலும் சிறப்புடனும், பல விவாதங்களுடனும் நடந்து முடிந்தது. கடந்த 16ஆம்17ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள  LEYTONSTON எனும் சுரங்கப்பாதை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள QUACKERS HOUSE எனும் மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது. ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட புதியஜனநாயக் கட்சி உறுப்பினரான தோழர்  ந.ரவீந்திரனும் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட அ.மார்க்ஸ் அவர்களும் நேரடியாகக் கலந்து கொள்ளமுடியாது போனது. இருப்பினும் தோழர் ரவீந்திரனும், அ. மார்க்சும் காத்திரமான கட்டுரைகளை மாநாட்டுக்கு அனுப்பிவைத்தனர். குறிப்பாக அ.மார்க்ஸ் அவர்கள் கட்டுரையாகவும் ஒலி வடிவத்திலும் தனது கட்டுரையை அனுப்பிவைத்தார். Continue reading →

 

Comments are closed.