“நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்”

ravikumarஇராமசாமி துரைரட்ணத்திற்கும் ரவிக்குமார் அவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முகநூல் உரையாடலின்போது இராமசாமி துரைரட்ணம் அவர்கள் ரவிக்குமாரை சாதிப்பெயர் கூறி இழிவுபடுத்திய செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் எதுவாகவும் இருக்காலம். ஈழத் தமிழ் சமூகம் உருத்தரிரமூர்த்தி சேரன் போன்றவர்களைத்தான் நம்பி இருக்கின்றது எனும் தேசியவாதக் கருத்து நிலையில் தோழர் ரவிக்குமார் நம்பிக்கை வைத்திருப்பதற்கான காரணங்களும் எதுவாகவும் இருக்கலாம். அவை வெறும் கருத்தியல் சார்ந்த ஒரு நிலைப்பாடு.

Continue reading

இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும்

stock-photo-a-law-book-with-a-gavel-constitution-266367737அகில இலங்கை  மக்கள் மகாசபை

அன்புள்ள தலைவர் மற்றும் குழாமிற்கும்
இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் சம்பந்தமான சந்திப்பில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் புதிய யாப்பில் இடம்பெறுமென நம்பி அகில இலங்கை மக்கள் மகாசபையின் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றேன்.
நாம் வைக்கும் கோரிக்கைகள் இலங்கையின் தேசிய பிரச்சனைகளைவிட சற்று வித்தியாசமானவை. தேசிய பிரச்சனைக்கு இந்நாட்டில் வாழும் சகல இன மொழி மத மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு சிங்கள தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாக சேர்ந்து சகலருக்கும் பொருத்தமான நல்லதொரு தீர்வை கொண்டுவரவேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்துவதோடு அதற்கு மேலும் வடகிழக்கில் குறிப்பாக வடக்கில் புரையோடிப்போய் இருக்கும் சாதியமைப்பாலும்       தமிழ்த்தலைமைகளாலும் தமிழர்களாலும் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளும் உள்வாங்கப்பட்டு அதற்கும் ஒரு தீர்வை இந்த யாப்பில் இடம் பெறவேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றபின் வடமாகாண நிர்வாக கட்டமைப்பினுள் சாதி பார்த்து ஒடுக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. ஆயுதத்திற்கு முன்பு அமைதியாக இருந்த சாதியால் ஒடுக்கப்படும் நிலவரம் தற்போது அதிகாரத்தில் உள்ள மேட்டுக்குடியினரால் அதிகரித்துள்ளது. இன்று வடக்கில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தெரியப்படுத்தி எமது பிரேரணைகளை முன்வைக்கின்றோம். இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இன, மொழி, மத பிரிவினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் இப்- புதிய யாப்பு உருவாக்கத்தில் பல்லின சமூகங்களுக்கிடையேயான உறவுகளும், புரிதல்களும் வலுவடைவதற்கு சாதிய சமூக பின்புலங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நாம் கருதுகின்றோம்.
நீண்டகாலமாக ஆரம்பப் பாடசாலை முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காணியுரிமைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், தேர்தல் வேட்பாளர் நியமனங்கள் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு  வருகின்றனர். எமது மக்களது அடிப்படை உரிமைகள் யாவும் பேணப்பட்டு சகல பிரஜைகளுடனும் சமமாக மதிக்கப்படவேண்டும். உதாரணமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வடபகுதியில் 50 வீதத்திற்கு மேலாக காணப்படுகின்ற போதிலும் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்மக்கள் சார்ந்து ஒருவர்கூட இல்லையென்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்களின் போதாமையும் மத, கலாசார, பாரம்பரிய பேணுகைகளும் குறிப்பிட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கின்றது. இவற்றினை கருத்தில் கொண்டு இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதற்காக கீழ்வரும் பரிந்துரைகளை அகில இலங்கை மக்கள் மகாசபையினராகிய நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.
1) ஒற்றையாட்சிக்குள் இலங்கை மக்கள் யாவரும் இன மொழி மத சாதி பாகுபாடின்றி சகல மக்களும் இலங்கையர்களாக அவர்களது தனித்தன்மை அடையாளங்கள் மாறாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யப்படல் வேண்டும். ஒற்றையாட்ச்சிக்குள் நியாயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். பல்லின சமூகங்களைகொண்ட எமதுநாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வுக்குள்ளே பிற்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்களும் இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுடனும் சமமான அந்தஸ்துகளுடனும் வாழ வழிவகை செய்தல் வேண்டும்.
2) தேர்தலில் வட்டாரம் தொகுதி பிரிப்பதில் யாழ் மேட்டுக்குடி நிர்வாத்தினர் தங்களுக்கு ஏற்றமாதிரி தங்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடியதாக பிரிப்பதற்குமுன் மக்களின் ஆணையை பெறல் வேண்டும். தற்போது இங்கே மேற்கொள்ளப்பட்ட எல்லை நி;ர்ணயங்கள் உயர்சமூக அதிகாரிகளினாலும் மேட்டுக்குடி அரசியல் தலைமைகளாலும் தமது தலைமையை தக்க வைப்பதன் அடிப்படையில் பெரும்பான்மைப் பலமுடைய மக்கள் சமூகங்களை இருகூறுகளாக பிரித்துள்ளனர்.
3) வடமாகாணத்தில் 50 வீதத்திற்கு மேல் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரச உள்ளுராட்ச்சி மாகாண தேசிய மட்டத்தில் இன மொழி சாதி விகிதாசாரப்படி தெரிவு செய்யக்கூடிய பொறிமுறை இயற்றப்படல் வேண்டும். ( பெண்களுக்கு 25 வீதமாக வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்படவேண்டும் என்றவரையறை போன்றது)
4) அரச நியமனங்களஇ; பல்கலைக்கழக ஆலோசகர்கள் திறமையுடன் கல்வித்தகமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வருபவர்களிற்கு விகிதாசாரப்படி முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
5) அரசாங்க பாடசாலைகளில் அரசு ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமை அடிப்படையில் ஆசிரியர்களாகஇ அதிபர்களாக நியமித்தாலும் யாழ் கட்டமைப்பு அதற்கு இடையூறாக இருப்பதுடன் ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து வருபவர்களை மேட்டுக்குடி பாடசாலைக்கு அனுப்பாமலஇ; 1970 களில் கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் 17 பாடசாலைக்கு போகும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். யாழ் மாவட்டத்தில் 15 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமஇ; வடமாகாணத்தில் 5 மாவட்டங்களும் உள்ளன. ஆனால் 68 வருடங்களாக இலங்கை சுதந்திரம் அடைந்த பின்புமஇ; ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமையிருந்துமஇ; இதுவரை ஒருவரும் அரசஅதிபர்களாக நியமனம் பெற்றதில்லை. எப்போதாவது ஒருவர் உதவி அரச அதிபர் நியமனம்தான் கிடைக்கபெற்றது.
ஆகையால் இலங்கை சுதந்திரம் அடைந்தபின் 1971ம் ஆண்டு இயற்றப்பட்ட சமூகபாகுபாடு செயல் சட்டம் மீண்டும் தற்போதய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் திருத்தி எழுதப்பட்டு முற்றாக நடைமுறைக்கு வருமாறு அமுல்படுத்தப்படல் வேண்டும்.
6) வடக்கில் இருக்கும் தேசவழமை சட்டம் பெண்களிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களிற்கும் எதிராகவே உள்ளது. எனவே இந்த சட்டம் மீள் பரிசோதனைக்கு கொண்டுவரப்படவேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைக்கு துணைபோகும் யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்திற்கு இன்றுவரை வழங்கப்பட்டுவருகின்ற சட்ட அங்கீகாரம் நீக்கப்பட்டு தேசிய சட்டங்களிற்குள் ஏற்றதாக மாற்றப்படவேண்டும்.

7) வடகிழக்கு பிரதேசங்களில் (குறிப்பாக வன்னி) வாழும் மலையக வம்சாவழி மக்களுக்கு நில உரிமையுடன் அவர்களும் சமமாக சகல நாட்டின் வழங்களும் வழங்கப்பட வேண்டும். அதேநேரம் வடகிழக்கில் வசித்த வசிக்கின்ற முஸ்லீம் மக்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்.

8) தமிழர் தமிழ்த்தலைமைகள் இன்றுவரை மாறி மாறி சிங்கள தலைமைகளால் ஒடுக்கப்பட்டே வந்துள்ளதாக கூறிக்கொண்டே வருகின்றார்கள். ஆனால் ஒரே இனம் மொழி மதம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி என்ற அவமானச் சின்னத்தால் தொடர்ந்தும் இன்றுவரை தமிழ்த்தலைமைகளால் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். கல்வி திறமையிருந்தும் அதிகாரங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளிற்கு எட்டாத வகையில் எழுதப்படாத பொறிமுறை ஒன்றை கட்டிக்காத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தப் பொறிமுறையை உடைப்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் மேட்டுக்குடியினரிற்கு கிடைக்கும் அதிகாரங்கள் அமையும் வகையில் உறுதிப்படுத்தும் முகமாக புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்;. அத்துடன் பாராளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் செல்லக்கூடியவாறு தேர்தல் முறையும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அல்லது நியமனமுறையில் அல்லது தேசியப்பட்டியல் மூலம் ஒடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்க வழிவகை இருக்குமாறும் நீங்கள் தயாரிக்கும் யாப்பு அமையு வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம். தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட நியமன பிரதிநிதித்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ்வாணைக்குழு சமூக பொருளாதாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்டரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறைகளிலும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் சமூகநிலையினை ஆய்வுசெய்து தீர்வுகளை முன்மொழிய வேண்டும். மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்துவதோடு, மேலும் முஸ்லிம், சிங்கள பிரசைகளையும் உள்ளடக்கியவர்களாக அமைதல் வேண்டும். அனைத்து வேலைவாய்ப்புக்கள் மற்றும் அபிவிருத்திக்கான நிதிஒதுக்கீடுகளில் வடமாகாணத்தில் வாழும் சகலசமூக பிரிவினர்களினதும் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஒதுக்கப்படக்கூடிய கோட்டா (இந்தியாவில் உள்ளதுபோல்) இருக்கவேண்டும். அதிகாரங்கள் கிராமத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். மத்திக்கோ மாகாணத்திற்கோ அல்ல.

Continue reading

புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.

அரசியல்அமைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புதிய அரசியல் யாப்பு மாற்றத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளிலும் மாற்றங்கள் நிகழும் எனும் நம்பிக்கைகளும் மேலோங்கி வருகின்றது.

இத்தருணத்தில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாம், தலித் சமூக அரசியல்-சமூக மேம்பாட்டை கருத்தில்கொண்டு தமிழ், சிங்கள அரசியல் தலைமைகளிடம் சில பரிந்துரைகளை முன்வைக்க வேண்டிய அவசியத்தை உணருகின்றோம்.

அந்தவகையில் புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய எமது பரிந்துரைகளை இலங்கையிலுள்ள சகல தமிழ், சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தற்போதைய அரச நிர்வாகத்திற்கும் அனுப்பியவைத்துள்ள பரிந்துரைகளின் பிரதியை கீழே பார்வையிடலாம்.
Scan0004
001

 

 

 

 

 

 

 

Scan0007

 

 

 

 

 

 

Continue reading

இலங்கையின் சமகால அரசியல் மீதான ஆய்வரங்கு

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஏற்பாடு செய்த இலங்கையின் சமகால அரசியல் மீதான ஆய்வரங்கு நேற்று மாலை (17-01-2016) 4 மணியளவில் ஆரம்பமானது. இலங்கை அரசியல் மீதான பல்வேறு நோக்கு நிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வரங்கிற்கான தலைமை உரையை தோழர் யோகரட்ணம் வழங்கினார். கட்சிக் கோட்பாட்டு சார்பு நிலையிலும், கடந்த ஆட்சியினதும், தற்போதைய ஆட்சியினதும் சார்பு நிலை, எதிர் நிலை உரைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாது வரலாற்று ரதீயான தமிழ் அரசயல் தலைமைகள் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. மகாணசபைக்குரிய  அதிகாரங்களை சாதகமாக பயன்படுத்தி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய வாய்புகள் இருந்தும், தமிழ் தலைமைகளோ துரோகிகளை இனம்காட்டி பிழைப்பு நடத்தும் அரசியலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது என்ற பார்வையிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மேற்படியான ஆய்வரங்கில் உதயகுமார், இரஜாகரன், சந்தான, சரவணன், எம்.ஆர்.ஸ்டாலின் ஆகியோர் இலங்கையின் சமகால அரசியல் மீதான தமது கருத்துகளை முன்வைத்தார்கள்.

கலந்துரையாடலின்போது சோபாசக்தி, விஜி, மோகன், இரஜாகரன், தேவதாஸ், சரவணன், சந்தான, எம்.ஆர்.ஸ்டாலின், யோகரட்ணம் போன்றோர்  குறுக்கு மறுக்கான கேள்விகளையும், கருத்துக்களையும் எதிர்கொண்டனர். சமஉரிமை இயக்கத்தின் சிங்கள நண்பர்களும் இவ்வாய்வரங்கில் கலந்துகொண்டதுடன் கருத்துகளையும் முன்வைத்தனர். சரவணன் அவர்கள் சிங்கள, தமிழ் மொழி பெயர்ப்புப் பணி நல்கி உதவினார்.

Continue reading

அஞ்சலி

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி –பிரான்ஸ்-
kuaseegaramn
நாட்டுப்புற  ஆய்வுகளில் புலமை மிக்கவர்  கே.ஏ. குணசேகரம் அவர்கள். பிரான்சிற்கு வந்த தருணங்களில் நாம் அவருடன் உரையாடியிருக்கின்றோம். அவர் பேசிக் கொண்டிருக்கும் சமயங்களில் அவரை பாடச் சொல்லிக்கேட்பதே எமது விருப்பமாக இருக்கும். தேர்ந்த நாட்டுப்புற இசைக்கலைஞர். பல திரைப்படங்களிலும் நடித்திருன்கிறார். நாட்டுப்புற ஆய்வுகளை நூலாகவும் பதிவு செய்தவர்.
மறைந்த கே.ஏ. குணசேகரத்தின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ‘மாமனிதன்’ எம் சி சுப்பிரமணியம் அவர்களின் 27வது நினைவுதினம் 12/01/2016

அ.தேவதாசன்
தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ்
12-01-2016

  “அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது –
ஆனால் அது நேர்மையானது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது.”   : எம்.சி.சுப்பிரமணியம்

mc6இலங்கை வடபுலத்து சாதிய கட்டமைப்பு என்பது இன்றுவரை அசைக்கமுடியாமலே இயங்கி வருகிறது. ஒரு சமூகத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது கல்வி, பொருளாதாரம் ஆகும்;. யாழ்ப்பாண வட புலத்தில் சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது மிக மிக தாமதமாகவே கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது இன்னும் பல ஆண்டுகள் பின் தங்கியே வருகிறது. ஆங்கிலேயர்கள் இலங்கையை தமது ஆட்சிக்குள் கொண்டுவந்த ஆரம்ப காலத்திலேயே உயர் சாதியினர் எனச் சொல்லப்படும் வெள்ளாளர்களுக்கு கல்வி வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிட்டன. ஆனால் அக்கல்வியை தாம் மட்டுமே சுவீகரித்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு சென்று சேரவிடாமல் தடுப்பதற்கும் பெரும்பாடு பட்டனர். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை தமக்கு அடிமை குடிமைகளாக தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வியை தடுத்தமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 

ஆனாலும் இவர்களது கபட நோக்கத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த சிலர் தாம் படித்தே தீரவேண்டும் தமது இனமக்கள் மீண்டெழ வேண்டுமென்ற இலட்சியத்துடன், பல        அவமானங்களையும், கொடுமைகளையும், தீண்டாமைகளையும் எதிர்கொண்டு வெள்ளைக்கார பாதிரிமாரின் தயவில் படித்து முன்னேறினர். அதுமட்டுமன்றி தாம்   சார்ந்த சமூகத்தினருக்கும் ஒளி விளக்காக திகழ்ந்தார்கள். அந்த வகையில் ஜோய் போல், எம்.சி.சுப்பிரமணியம் போன்ற இன்னும் சிலரை குறிப்பிடலாம்.

எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் 27-09-1917 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். ஐந்து வயதில் மெதடிஸ்த கல்லூரியில் தொடங்கிய கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் முடித்துக்               கொண்டார். தாழ்த்தப்பட்ட சாதியினர் பாடசாலைக்கு செல்வதற்கே மறுக்கப்பட்ட காலத்தில் பல அவமானங்களை தாங்கியவாறும், பல எதிர்ப்புகளின் மத்தியிலும்;தான்  தனது கல்வியை தொடர்ந்தார். உயர்சாதியினர் வாங்குகளில் இருந்து படித்தபோது, இவர் வெறும் தரையில் இருந்தே படிக்க முடிந்தது. இது போன்ற அவலமான நிலைமைகள் அவருக்குள்ளேயே சாதியம் மீதான கோபத்தையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  மறுக்கப்படும் கல்வி உரிமைகள்  கிடைக்கவேண்டும் என்ற ஆவேசத்தையும் தூண்டிவிட்டது. இதனால்தான் அவர் படித்து முடித்து அரச உத்தியோகம் கிடைக்கப்பெற்றும் அவைகளை தூக்கி எறிந்துவிட்டு முழுநேர சமூகவிடுதலைப் போராளியாக தன்னை உருவாக்கிக் கொண்டார்.

சமூக விடுதலைப் போராளியான தோழர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் மறைந்த 27வது வருட நினைவுக் குறிப்பு

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி –பிரான்ஸ்-
mc6
செப்டெம்பர் 27- 1917-                                    ஜனவரி 12- 1989

Continue reading

பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாகாணசபையின் தேர்தல் ஒதுக்கீடும், பிரதிநிதித்துவ பங்கீட்டு முறைமையும்.

 

 

nouvel region

 

 

 

பிரான்ஸ் படத்தை அழுத்தவும் Continue reading

கோமாதா எங்கள் கொலைமாதா.

 

தி.ஸ்டாலின்.

மீண்டும் இந்துத்துவா மாட்டிறைச்சியை கையிலெடுத்திருக்கிறது. தமது வெறிப்பிடித்த அரசியலுக்கு ராமன் தற்சமயத்தில் கைக்கொடுக்க வக்கற்றவனாகிவிட்டதால் இந்துத்துவா மாட்டிறைச்சியை தேடி அலையத்துவங்கிவிட்டது. அதன் தீவிரமான மாட்டுக்கறி அரசியல் தெருவோடு மட்டுமல்ல மக்களின் அடுப்படிவரை வந்து நிற்கிறது. கொலையும்கூட செய்கிறது. மாடு கொல்லப்பட்டால் அதற்குக் காரணமானவர்களையும் கொல்லுதல் என்பதுதான் இன்றைக்கு இந்துத்துவாவின் ஜீவகாருண்ய பிரகடணமாக இருக்கிறது.

மாட்டிறைச்சியை முன்வைத்து இந்துத்துவா கும்பல் வன்முறையை கட்டவிழ்ப்பது புதியதல்ல. கடந்தமுறை இதே பாரதிய ஜனதாக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தவேளையில் ஹரியானா மாநிலத்தில் பசுவின் பெயரால் ஒருக் கொடூரம் நிகழ்த்தப்பட்டது. அம்மாநிலத்தின் ஜாஜர் என்னும் கிராமத்தில் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்தேதி ஐந்து தலித்துகள் கொல்லப்பட்டார்கள். அந்த ஐந்து தலித்துகள் மீது கொலைக்காரர்கள் சுமத்திய குற்றச்சாட்டு அவர்கள் பசுவைக்கொன்றார்கள் என்பதுதான். உண்மையில் அதுவொரு நிருபிக்கப்படாத குற்றச்சாட்டு. அவர்கள் ஒரு பசுமாட்டை அடித்துக்கொன்றார்கள் என்றும் அவர்கள் பசுவின் தோலை சந்தையில் விற்க வந்தார்கள் என்றும் இரண்டுவிதமாக அக்குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர்கள் எந்த பசுவையும் கொல்லவுமில்லை என்றும் பிறகு நிருபிக்கப்பட்டது. எதுவானாலும் அக்குற்றச்சாட்டால் அவர்கள் காவல்நிலையயத்தில் அடைக்கப்பட்டனர் என்பது உண்மை. காவல்நிலையத்தில் அடைக்கப்பட்ட அந்த ஐந்து தலித்துகளையும் கும்பலாக வந்த சாதி இந்துவெறியர்கள் காவல்நிலையத்திலிருந்து வெளியே இழுத்துவந்து, முக்கியச்சாலையில் காவல்துறையின் முன்னிலையில் அடித்தேக் கொன்றனர். அன்று கொல்லப்பட்டவர்களின் ரத்தம் அந்த சாலையில் காயுமுன்னவே நாடெங்கும் கூடிநின்று பசுவதைக்கூடாது, பசுவுக்கு பாதுகாப்பு வேண்டுமென கோஷம்போட்டு அப்படுகொலையை நியாயப்படுத்தினர் இந்துத்துவாவினர். சென்னையிலும்கூட சங்கரமடத்தின் ஆதரவில் அதன் ஆச்சாரிகள் வழிக்காட்ட பசு பாதுகாப்புப் பேரணி நடத்தப்பட்டது. இவ்வாறு பசுவின் மூலம் தேசமெங்கும் இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியைத்தான் இந்துத்துவா செய்கிறது.தற்போது மீண்டும் மத்தியில் ஆளும் இடத்தில் ஏறிவிட்ட இந்துத்துவாக் கும்பல் தமது சீரழிவான ஆட்சியால் தமக்கு ஏற்படும் சரிவை சரிக்கட்டவும், மேலும்மேலும் இந்து ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கி அதன் மூலம் தமது அரசியல் பலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும் பசுமாட்டுக்கறியை கையிலெடுத்திருக்கிறது. Continue reading

தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

மறைந்த சமூகப்போராளி தங்கடிவேல் மாஸ்டர் அவர்கள் இலங்கை  தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஏற்பாடு செய்த இரண்டு நிகழ்வில் கலந்து கொண்டவர். எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி, இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும் எனும் நூல்களின் அறிமுக, கலந்துரையாடல் நிகழ்வில் இலண்டனிலும், தோழர் யோகரட்ணம் அவர்களின் தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்டநாட்களும் எனும் நூல் வெளியீடு இலங்கையில் நடைபெற்றபோது அதிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர்.
நாம் அவரது வாழ்க்கை அனுபவங்களை தொகுத்து வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டபோதும் துரதிருஷ்டவசமாக அது நிறைவேறாது போனது. சாதிய சமூக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு அதற்கெதிராக  போராடிய அமைப்புகளாக தீண்டாமை ஒழிப்பு வெகுஜென இயக்கமும், அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மாகாசபையும் என்பதை நாம் அறிவோம். அந்தவகையில் தோழர் தங்வடிவேல் மாஸ்டர் அவர்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய மேற்படி இரண்டு அமைப்புகளிலும் இணைந்து வேலை செய்த அனுபவத்தை கொண்டவர். அந்தவகையிலே அவரிடம் பல்வேறுபட்ட அனுபவங்கள் இருந்திருக்கும் அவற்றை தொகுத்து வெளியிடவேண்டும் என்ற எமது முயற்சி பலனளிக்காது போனது.