அதுவும் கம்பர்மலையில் தலித்துகளுக்கு ஒரு கொலை மிரட்டல் விடுவதென்பது இலேசான காரியம் இல்லை: தெணியான்

தங்கவடிவேல் மாஸ்டரின் நினைவு நூல் வெளியீட்டின்போது நடந்த கொலை மிரட்டல் சம்பந்தமான செய்தி தவறானது என அறியக் கிடைத்தது. எழுத்தாளர் தெணியானிடம் தொடர்பு கொண்டபோது அப்படி ஒரு செய்தியும் இல்லை தானும் ஒரு கட்டுரை அந்நூலுக்கு எழுதியிருக்கிறேன். அதுவும் கம்பர்மலையில் தலித்துகளுக்கு ஒரு கொலை மிரட்டல் விடுவதென்பது இலேசான காரியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தங்கவடிவேல் மாஸ்டரின் மகன் சுரேன் அவர்களும் அச்செய்தியை ஒரு வதந்தி என மறுத்தும் எழுதியுள்ளார். அதை இத்துடன் இணைத்துள்ளோம்.
இச்செய்தியை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு வருந்துகின்றோம்.
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
—————–

Continue reading

சாதிய மேலாண்மைக் கொலை மிரட்டல்

sans-titrethangavadivelu-master-in-canada-meeting

 

 

 

 

மாவட்டபுர கந்தசுவாமி கோவில் நுழைவுப் போராட்டத்திற்கான திட்டமிடலில் முன்னணி பாத்திரம் வகித்தவரும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன அமைப்பின் செயல்பாட்டாளராகவும் இருந்தவர் மறைந்த தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள்.

சாதிய தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உக்கிரமான எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்ந்த காலகட்டத்திலும் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் மறைந்த தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள்.

இந்த சமூக விடுதலைப் போராளியின் நினைவாக இன்று (18-10-2015) வெளியிடப்பட இருந்த நூல் ஒன்று, சாதிய யாழ்-மேலாதிக்க மனநிலை கொண்ட சக்திகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக முகநூல் தகவல்கள்  ஊடாக அறிகின்றோம். அதுமட்டுமல்லாது அந்நூல் வெளியீட்டு ஏற்பாட்டாளர்களுக்கு கொலை மிரட்டல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிகின்றோம். தங்கவடிவேல் மாஸ்டரின் கிராமத்தில் அமைந்த பொன்.கந்தையா சனசமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே ஒடுக்குமுறைச் சாதியினரால் மேற்படி சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.
இச்சம்பவத்தை ஒரு நாளாந்த செய்தியாக நாம் கடந்து சென்றுவிடலாமா?
இன்று எமது மத்தியில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதில்லை, அம்மன நிலை இன்று மிகவும் அருகி வருகின்றது என வழக்காடுபவர்கள் இச்செயலுக்கு வழங்கும் நியாயம்தான் என்ன?
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு, யாழ்ப்பாணத்திலுள்ள எமது ‘வடு’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு  இது குறித்த மேலதிகமான தகவல்களை எதிர்பார்த்திருக்கின்றோம்.

Continue reading

தலித்துக்களை புறக்கணிக்கும் தமிழ் தேசியம்: 2015இற்கான பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து

 
தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, பின்பு பலதும் கலந்த தமிழர் விடுதலைக் கூட்டணியாக உரு மாறி, இறுதியாக விடுதலைப் புலிகளின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் ஏற்றவகையில் பெயர் போர்த்திக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் அதன் தலைமைகளும் தொடர்ந்தும் தலித் மக்களை வாக்களிக்கும் ஒரு சமூகப்பிராணிகளாகவே கருதி வருகின்றனர். அம்மக்களின் வாக்குகளை கொத்தாக பெறும் நோக்கத்திலும், வாக்குகளை சிதறவைக்கும் தந்திரத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த சிலரை தமிழ் தேசியத் தலைமைகள் வேட்ப்பாளர்களாக நியமித்த, நியமிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றது. இவை அனைத்துமே தமிழ் தேசியத் தலைமைகளின் நலன்களுக்கு உகந்ததாகவே திட்டமிடப்பட்டும் வருகிறது.
தமிழ் தேசியம் பேசும் தலைமைகளோ சாதிரீதியான சமூக ஒடுக்குமுறைக்கு எதராக குரல் எழுப்பிய வரலாறு நிகழ்ந்ததில்லை. தமிழ் மக்களுக்காக அவர்கள் செய்த சமூக அரசில் தியாகம் என்பது எதிர்ப்பு அரசியல் சாதனை மட்டுமே!

ரோகிங்கிய மக்களின்  மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக  06ம் திகதி சனிக்கிழமை  லண்டனில் ,  அனைத்து  மக்களையும், ஜனநாயக அமைப்புகளையும் , மனித உரிமைவாதிகளையும் இணைத்த   நிகழ்வு  

downing street

பர்மிய அரசாங்கத்தின் இனவாத, பாராபட்ச  கொள்கையினால் பல தசாப்த காலமாக   தொடர்ந்தும் கொல்லப்பட்டும் ,அகதிகளாக்கப்பட்டும் ,அச்சுறுத்தப்பட்டும் வருகின்ற ரோகிங்கா மக்களின்துன்பத்தில் தோய்ந்து, அந்த மக்களை ஒடுக்குகின்ற பர்மிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதும், ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையை உலகளவில் வெளிக்கொண்டு வருவதும் நம் அனைவரினதும் உடனடிக் கடமையாக உள்ளது.

காலத்திற்கு காலம் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகின்ற ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையின் கொடுந்தன்மையை சர்வதேச மயப்படுத்த அனைத்துவகை முயற்சிகளையும் எடுப்பதுடன், அந்த மக்கள் மீதான ஒடுக்குதலை தடுத்து நிறுத்த உலக நாடுகளையும் , சர்வதேச அமைப்புகளையும் மனித உரிமை நிறுவனங்களையும் கோருவதும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதும் இன்று மிக முக்கியமானது. Continue reading

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததியர்களுக்கு நீதி எங்கே?

– என்.சரவணன்-

(இந்த புகைப்படம் 1952 இல் எடுக்கப்பட்டது. கொட்டாஞ்சேனை ஸ்ரீ குனானந்த மாவத்தையிலுள்ள சிமெந்து தோட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும்   சாதிய தப்பி ஓடலின்  காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.)
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்கள், காலங்காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த லயன் வாழ்க்கை முற்றுபெறத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகாலப் போராட்டத்தின் பலன் இது.
“பசுமை பூமித்திட்டம்” நீதியான முறையில் முழுமை பெற அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர் மலையக மக்கள். காம்பரா வாழ்கையிலிருந்து விடுதலை பெற்று தம்மால் செழிப்பாக்கப்பட்ட நிலத்தில் 200 வருடங்களின் பின்னர் சொந்தமாக ஒரு காணித்துண்டை பெற்றுகொள்வதற்கான பயணம் பல முள் நிறைந்த பயணங்களைத் தாண்டி வந்தடைந்துள்ளது.
இந்த பிரச்சினையின் இன்னொரு வடிவத்தை அரசாங்கமும் அரசியல் சக்திகளும் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. அதை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
வீடு, காணி பிரச்சினைத் தீர்வில் நகரசுத்தித் தொழிலாளர்களான அருந்ததிய மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.
இவர்கள் குறித்து அரசியல் தளத்தில் போதிய அக்கறை நிலவுவதில்லை. இவர்கள் பற்றிய கரிசனை இன்மைக்கான காரணங்கள் மிகவும் சூட்சுமம் மிக்கது.

பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்!

 

18 mai 2015, 20:05

மே மாதம்13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின்உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டுபின் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுமறு நாள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஆணாதிக்கக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்எமது சமூகத்தில்பெண்கள் குடும்பத்துக்குள்ளும்,வெளியுலகிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும்,மத நிறுவனங்களிலும்,அரசின் கையிலும்நாளாந்தம் அனுபவித்துவரும்வன்முறைகளின் நீட்சியே வித்யாவிற்கு நிகழ்ந்த இக்கோரச்சம்பவம்ஆகும். பெண்கள்சுதந்திரமாகப் பயமின்றி ஆண்களுக்குச் சமமாக எங்கும்உலவி வரவும்,அவர்கள் சுயவெளிப்பாட்டுடன்பொதுவெளியில் இயங்கவும், அவர்களுக்குத் தகுந்த உத்தரவாதமற்றநிலை தொடருவதன்சாட்சியங்களே இச்சம்பவங்கள்.
மாங்குளத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா கூட்டுவன்முறைக்குஉட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இரண்டு மாத இடைவெளிக்குள்வித்யாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையில் மட்டும் 2012 க்கும் 2014க்கும் இடையிலானகாலத்தில் 4393 வன்கொடுமைச்சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.இவை முன்னையஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 20 வீதமாக அதிரித்துள்ளன.
இலங்கையில் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பொலிஸாரினாலும்,இராணுவத்தினராலும், பெண்கள் பாலியல்பலாத்காரங்களிற்கும் வன்கொடுமைகளிற்கும்உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இத்தகையபாலியல் வன்கொடுமைகள்எமது சமூகத்தின்சக உறுப்பினர்களினாலும்,உறவுகளினாலும் நடத்தப்படுவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை பதிவுக்குள்ளாக்கப்படுவதோ,கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதோமிகவும் அரிதாகவேஉள்ளது என்பதுஎமது கடந்தகாலஅனுபவமாகும்.
பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும்,அரச நிறுவனங்களும்குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்துவருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக்கூடிய வலுவானசட்டங்கள் அமுலில்இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கியகாரணமாகும்.
இக் கொடூரச்செயலுக்கு நாம்எமது வன்மையானகண்டனத்தை தெரிவிப்பதோடுகீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.
• வித்யாவின் சம்பவத்துடன் தொடர்பானகுற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்படவேண்டும்.
· • இலங்கையில்பெண்களிற்கெதிரான சகல வன்முறைகளையும் தண்டிக்கும் முகமாகவலுவான சட்டங்கள்இயற்றப்பபடவேண்டும்.
· நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மீள்பரிசீல ணை செய்யப்பட்டு, அவை பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் முகமாக அமுல்படுத்தப்படவேண்டும்.
· இதுபோல் இன்னும் விசாரிக்கப்படாமலுள்ளபாலியல் பலாத்காரம்சம்பந்தமான வழக்குகள் விசாரனைக்குட்படுத்தப்பட்டுதகுந்த நீதிவழங்கப்படவேண்டும்.
• பாடசாலைகள் மற்றும் கல்விநிறுவனங்களில்பெண்களிற்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல் மற்றும் அவற்றைத்தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் சகல மட்டங்களிலும்விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களைஅமுல்படுத்தல் வேண்டும்.
• பெண்களிற்கெதிரானவன்முறை மற்றும்பாலியல் வன்கொடுமைச்சம்பவங்கள் முறையிடப்படும் அலுவலகங்களிலும்,வழக்குகளை விசாரிக்கும்நிர்வாகத்திலும் கணிசமான பெண்களின் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும்.
• மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைநடைமுறைபடுத்த இலங்கையில் இயங்கும் சகல அரசியல்சமூக ஜனநாயகமனிதவுரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்குஅழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
பெண்கள் சந்திப்புத்தோழிகள் மற்றும்பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள்.

Continue reading

சாதிய மனநிலையில் அலட்சியப்படுத்தப்பட்ட “தலித் மக்களின் உரிமைப்போராட்டம்”

-இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ்

திருகோணமலை நகரத்து சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்கான போராட்டத்தை கடந்த மே2-3 (2015) ஆம் திகதிகளில் நடத்தினார்கள்.

  • பல வருடங்களாக இத்தொழிலாளர்களின் சம்பளம் உயர்தப்படாமல் இருப்பது.
  • நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் தொடர்ந்தும் பல வருடங்களாக நிரந்தர பணியாளர்களாக இல்லாது நாட்கூலிகளாகவே இருப்பது.
  • பிள்ளைப் பேறுகாலத்து உதவிகள் மறுக்கப்பட்டு வருவது.
  • மருத்துவ விடுமுறைகாலத்திற்கான உதவிகள் மறுக்கப்பட்டு வருவது
  • இத்தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய உத்தரவாதம் மறுக்கப்பட்டு வருவது.

மேற்படி நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் உரிமைகளை கோரும் முகமாக திருகோணமலை நகரசுத்தித் தொழிலாளர்களால் உரிமைப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Trinco_01இத்தொழிலாளர்களின் போராட்டம் தமிழ் தேசிய ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை காரணமாக சாதிய மனநிலையே மேலோங்கியுள்ளது.
திருகோணமலை நகரசபை நிர்வாகத்தின் அதிகார ஆதிக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடமே உள்ளது. இவர்கள் இச்சமூகத்தின் உரிமைப் போராட்டத்தையும் அவர்களது சமூக மேம்பாட்டிலும் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. சிங்கள இனவாதத்திற்கே முன்னுரிமை கொடுத்துவரும் யாழ் மேலாதிக்க ஊடகங்கள் எதற்கும் தலித் சமூகத்தின் இவ்வாறான உரிமைப்போராட்டம் ஒரு மூலைச் செய்திக்காகவேனும் பயன்படவில்லை. Continue reading

சாதிய ஒடுக்குமுறையை, தீண்டாமை பாகுபாட்டை கேள்விக்குள்ளாக்கும் சக்தியா… தமிழ் தேசியம்!

“ஆயிரக் கணக்கான சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் மக்கள் எப்படி ஒரே தேசமாக ஆவார்கள்? தேசம் என்ற சொல்லின் சமூகவியல்ரீதியிலான அர்த்தத்திலும் உளவியல்ரீதியிலான அர்த்தத்திலும் நாம் இன்னும் ஒரு தேசமாக உருவெடுக்கவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் உணர்கிறோமோ அவ்வளவுக்கு நமக்கு நல்லது. அப்போதுதான் ஒரே தேசமாக நாம் உருவாவதன் அவசியத்தை உணர்வதுடன் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் தீவிரமாக நாம் சிந்திப்போம்.”

(அம்பேத்கர்)

-தேவதாசன்-

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் தமிழ் தேசிய முழக்கம் ஆரம்பித்து அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இதில் தமிழர்கள் அடைந்த நன்மையென்ன? தீமை என்ன? என்பது பற்றி இலங்கை இந்தியா வாழ் தமிழ் மக்கள் இதுவரை ஆய்வு செய்ததாக இல்லை. ஆனாலும் தொடர்ச்சியாக விறு விறுப்பான முறையில் தமிழ் தேசிய முழக்கங்கள் பெருகி வருவதை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. அதன் பலா பலன்களை தமிழர்கள் அனுபவித்தும் வருகின்றனர். Continue reading

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள்

ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.

அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்? நமது சமூக, பொருளாதார வாழ்வில் இன்னும் எவ்வளவு காலம்தான் சமத்துவத்தை நாம் புறக்கணிக்கப்போகிறோம்? இப்படியே நாம் வெகு காலமாக அதைச் செய்தால் கடைசியில் நமது அரசியல் ஜனநாயகத்தைப் படுகுழியில்தான் போய்த் தள்ளிவிடுவோம்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்களெல்லாம் அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பை, அதாவது நாமெல்லாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அந்தக் கட்டமைப்பை, தகர்த்தெறிந்துவிடக் கூடும்.

ஒரே தேசமா?

Continue reading